உங்கள் வெளிச்சம் மனுஷர் முன்பாக இவ்விதமாய் பிரகாசிக்கக்கடவது 61-0903 இது எனக்கு சற்று எதிர்பார்க்கப்பட்டதாய் இருப்பது போன்றே இது உங்களுக்கும் இருக்கிறது. நான் வந்து விட்டேன்…நான் ஒரு மாய்மாலக்காரனின் பாகத்தை ஒருவிதமாக எடுத்துக் கொண்டேன் என்று நான் அறிக்கையிட வேண்டியவனாய் இருக்கிறேன். நான் சற்று காலதாமதமாகவே வந்தேன். நான், “நான் அங்கே செல்லும்போது சகோதரன் நெவில் பிரசங்கித்துக் கொண்டிருப்பார், எனவே அவர் என்னிடத்தில் ஒரு வார்த்தையும் கூறமாட்டார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே போவார்” என்றேன். 2 நான் வாசலுக்குள் வந்தபோது, பில்லி என்னிடத்தில் கூறினான், அவன், “சகோ. நெவில் ஏற்கனவே பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார், நீர் சரியான நேரத்தில் வந்திருக்கிறீர்” என்றான். நான், “அருமை” என்றேன். 3 நான் அங்கு சென்றபோது, அவர், “நான் இன்னும் பிரசங்கிக்க துவங்கவில்லை. நான் ஒருவிதமாக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். 4 எனவே நான் நினைத்தேன், “நல்லது, ஒருகால்…”, நான், “ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பிரசங்கிப்பதென்றால், அது எப்படியிருக்கும் என்றும், அது ஒருவிதமாக உங்களை களைப்படையச் செய்யும் என்றும் நான் அறிவேன்” என்றேன். நாம் அதை அறிவோம். விசேஷமாக நம்மைப் போன்று அவர்கள் வாலிபமாயிருக்கும் பொழுது, அந்த வாலிப நபர்கள் மத்தியில் அதற்கு நீண்டநேரம் ஆகாது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே நாம் சகோதரர்களாய் இருக்கின்றபடியால் ஒருவிதமாக ஒன்று சேர்ந்திருக்கிறோம். எனவே தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக நாம் ஒன்று சேர்ந்து பணிபுரியும்படியாக, நம்முடைய தோள்களை ஒன்றாயும், நம்முடைய இருதயங்களை ஒன்றாயும், நம்முடைய எண்ணங்களை ஒன்றாயும் ஒரேவிதமாக நாம் வைத்திருக்கின்றோம். 5 உங்களோடு ஒன்று சேர்ந்து இருக்க நாங்கள் விரும்புகிறோம். அது—அது ஒரு கம்பீரமான காரியமாய் உள்ளது. எனவே, நான் கர்த்தரிடத்தில் எனக்கு ஒரு சிறு பேசும் பொருளை, மற்ற ஏதோ ஒன்றை, அதிலிருந்து ஒருவிதமாய் துவங்குவதற்கு தரும்படி கேட்டுக்கொண்டேன். நான் இன்னமும் என்ன கூறப்போகிறேன் என்பதை நான் அறியேன், ஆனால் நாம் இப்பொழுதுதான் துவங்கினோம், ஆகையால் அவர் நம்மை எப்படியாவது நடத்துகிறார். இது உண்மையாயிருக்கிறது என்று நாம்… 6 நான் பதினைந்தாம் தேதி, அலாஸ்காவில் உள்ள ஃபேர்பாங்ஸ் என்ற இடத்தில் ஆறுநாள் கூட்டங்களை பதினைந்தாம் தேதி முதல் தொடங்கி நடத்த வேண்டியவனாயிருக்கிறேன். ஆனால் இந்த முறை என்னால் அங்கு செல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை, ஏனென்றால் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்குச் செல்ல வேண்டிய இன்னொரு நியமனத்தை நான் உடையவனாயிருக்கிறேன். ஆகவே இந்த முறை என்னால் அங்கே போகமுடியும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் கூடவே வியாபார புருஷர்களின் சபையை ஸ்தாபிக்க விரும்புகிறார்கள், கிறிஸ்தவ வியாபார புருஷர்கள். 7 இப்பொழுது நாங்கள் ஆயத்தப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிற, வருகின்றதான கூட்டங்களுக்கான, உங்களுடைய ஜெபங்களை நான் நிச்சயமாகவே வாஞ்சையோடு கேட்டுக் கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்னர், நான் ஒரு அழைப்பிதழை உடையவனாயிருந்தேன், அது ஏதோ நன்மையானது போன்று தோன்றினது. கர்த்தர் அதில் இருக்கிறாரா அல்லது இல்லையா என்பதை நான் அறியேன். எனவே நான் காத்திருந்து, அதை அறிந்து கொள்ள வேண்டியதாய் உள்ளது. நான் ஜனவரியில் பீனிஸுக்கு வரவேண்டுமென்று வியாபார புருஷர்கள் விரும்பியுள்ளனர். அங்கே ஒவ்வொரு சபைக்கும், ஒவ்வொரு இரவாக, பீனிக்ஸ் பட்டினம் முழுவதும் செல்ல வேண்டுமாம். அதன் பிறகு அங்கே தனிப்பட்ட சிறப்பு கூட்டங்களை வைப்பார்களாம். அது எனக்கு ஒருவிதமான ஆர்வத்தை அளிப்பது போன்று தோன்றிற்று. ஏனென்றால் அது சபைகளிடத்திலும் மற்ற எல்லா ஊழியக்காரர்களிடத்திலுமே பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கும். 8 வழக்கமாகவே, ஜனங்கள் என்னைக் குறித்து நினைக்கும்போது நான் ஸ்தாபனங்களை மிகவும் எதிர்த்து கண்டிக்கிற காரணத்தால், நான் ஸ்தாபன்ங்களில் இருக்கின்ற ஜனங்களுக்கு எதிராய் இருக்கிறேன் என்றே எண்ணுகிறார்கள். நான் எந்த விதத்திலும் அப்படி இருக்கவில்லை. நான் ஜனங்களுக்காகவே இருக்கிறேன். 9 ஒரு மனிதன் இங்கு ஆற்றில் ஒரு படகில் வந்து கொண்டிருப்பதை நான் கண்டால், அந்த படகில் ஓட்டைகள் நிறைய இருந்தால், அந்த படகு அங்கே இருக்கின்ற அந்த சிற்றலைகளினூடாக ஒருபோதும் போகமுடியாது என்பதையும் நான் அறிந்திருப்பது போன்றே இது இருக்கிறது. அப்பொழுது நான் கூக்குரலிட்டு, அந்தப் படகை என்னால் முடிந்த அளவு கடினமாக கண்டனம் செய்வேனேயன்றி, அந்தப் படகில் இருக்கின்ற மனிதனையல்ல. நான் அந்த படகைத்தான் கண்டனம் செய்துகொண்டிருக்கிறேன். அந்தப் படகு போய்ச் சேராது என்பதை நான் அறிவேன். எனவே ஸ்தாபனம் அதைச் செய்ய முடியாது என்று நான் அறிவேன். ஆனால் உங்களால் அதை விட்டு வெளியேற முடிந்தால், அங்குள்ள மனிதர்கள் சென்றடையலாம் என்பதை நான் அறிவேன். புரிகின்றதா? 10 ஆனால் உங்களிடத்தில் ஒரு பழைய மோட்டார் வாகனம் இருந்தது. நீங்கள் மலையில் மேலே ஏறிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் மற்றொரு பக்கத்தில் புறப்படத் துவங்கினபோதே வண்டியில் நிறுத்துவதற்கான தடுப்புக் கருவி இல்லாதிருந்தது என்பதை நான் அறிந்திருந்ததைப் போன்று இது உள்ளது. நான் அந்த மனிதனுக்கு விரோதமாய் இருக்கமாட்டேன், நான் அவனுக்கு எதிராக சத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன். அது அவனையல்ல. அவன் உள்ளே இருக்கிற அந்த மோட்டார் வாகனத்தையே. அவன் காயமடையப் போகிறான். 11 அது ஸ்தாபனத்தைப் பற்றியதாய் இருக்கிறது. அது அந்த ஸ்தாபனங்களை பற்றிக்கொண்டிருக்கும் ஜனங்கள் என்று நான் நினைக்கிறேன். அது தேவன்தாமே என்பது போல், அவர்கள் தேவனுடைய வார்த்தையை விட்டு விட்டு, அப்படியே அந்த ஸ்தாபனத்தை பற்றிக்கொள்கிறார்கள். நல்லது, அவர்கள் அதைச் செய்யும்பொழுது, அவர்கள் முக்கியமான ஒரு தவறை செய்யப்போகிறார்கள் என்று நான் பயமடைந்திருக்கிறேன். அது ஏதோ அந்த தனிப்பட்ட நபருக்கு எதிராக நான் இருக்கிறேன் என்பதல்ல, ஆனால் அது அவன் பிரயாணம் செய்து கொண்டிருக்கின்ற படகாக இருக்கின்றது, பாருங்கள், அதுபோய் சேராது என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். ஸ்தாபனம் அதை ஒருபோதும் போய் சேர்க்காது, ஆனால் கிறிஸ்து சேர்ப்பார். எனவே அந்த ஒழுகலுள்ள படகாகிய ஸ்தாபனத்தை விட்டு அப்படியே வெளியே வந்து, பாதுகாப்பான சீயோன் கப்பலுக்குள், நேரத்தில் தேசத்திற்குப் போய் சேர இன்னமும் தவறிப் போகாமலிருக்கிற அந்த பழைய கப்பலாகிய கிறிஸ்துவுக்குள் சென்று விடுங்கள். 12 அதை சிந்தியுங்கள், அந்த மனிதர்களிடத்தில், பேசுவதற்கு அது எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கும். 13 இப்பொழுது நான் நினைத்தேன், ஒருக்கால்…இன்றிரவு இது இராப்போஜன இரவாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரு ஞானஸ்நான ஆராதனை இருந்ததென்றும், இன்னொன்று இருக்கப் போகிறது என்றும் நான் கேள்விப்பட்டேன். நான் இராப்போஜனத்திற்காகவே வர விரும்புகிறேன். இங்கு நான் இல்லாதபடியால் கடந்தமுறை நான் அதை தவற விட்டுவிட்டேன். நான் அதை தவற விட்டுவிட்டேன். இதுதான் முதல் ஞாயிறு என்று நான் அறிந்து கொண்டேன். எனவே, நான் இங்கே இருக்கும்படியாக ஆயத்தங்களை செய்தேன். ஆகையால் இன்றிரவு இராப்போஜனத்தில் நான் இருக்கக்கூடும். 14 ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய கடமையும் இராப்போஜனத்தில் பங்கு பெற வேண்டியதாய் இருக்கிறது என்றே நான் நிச்சயமாக கருதுகிறேன். வேதம், “இதில் நீங்கள் பங்கு பெறவில்லையென்றால், உங்களுக்கு என்னிடத்தில் பங்கு இல்லையென்று” என்று கூறியுள்ளது. அது கிறிஸ்தவர்களுக்கான ஒரு பலப்பரீட்சையின் நேரமாய் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். நாம் அபாத்திரராய் அதில் பங்கு பெற்றால், அப்பொழுது கிறிஸ்துவின் மரணத்தையும், சரீரத்தையும் குறித்து குற்றவாளிகளாய் இருக்கிறோம். ஆகவே, அவன் இராப்போஜனத்திற்கு வரும்பொழுது ஜெபித்த கிறிஸ்தவனாக வரவேண்டிய ஒரு ஸ்தானத்தை அது உண்டாக்குகிறது. நாம் பயபக்தியோடு பவித்திரமாகவும், புனிதமாகவும் நடந்து வந்து, நம்முடைய தவறுகளை எல்லாம் அறிக்கை செய்துகொண்டு, ஒருவர் இன்னொருவருக்கு ஜெபம் செய்கிறவர்களாய் வரவேண்டும். அது மட்டுமல்லாமல் நாம் உணர வேண்டும்…எங்கோ சற்று வழியிலிருந்து விலகியிருப்பதாக நாம் உணருகின்ற சகோதரனோ அல்லது சகோதரியோ நம் மத்தியில் இருந்தால், விசேஷமாக உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படாமல், அவர்கள் நடந்து வந்து, இராப்போஜனத்தில் பங்கு பெறக் கூடியவர்களாய் அவர்களைக் காணும்படியாக இராப்போஜன இரவன்று நம்முடைய இருதயங்கள் அந்த நபருக்காக பாரப்பட வேண்டியதாய் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் நம்முடைய சகோதரர்களும், சகோதரிகளுமாய் இருக்கிறார்கள். 15 இப்பொழுது கடந்த சில வாரங்களாக, இரண்டு அல்லது மூன்று வாரங்களாக, இரண்டு வாரங்கள் கழித்து மூன்றாவது வாரமும், நான் அதிகமாய் பேசாமல் இருக்கிறேன். நான் வெறுமனே இளைப்பாறிக் கொண்டு வருகிறேன். ஏனென்றால் இது எனக்கு பெரிய அழுத்தத்திற்கு முன்னதாக ஒருவிதமான இளைப்பாறும் காலமாய் இருக்கிறது. 16 சகோதரன் நெவில் அரசியல்வாதிகளை மற்றும் இந்தக் காரியங்களைக் குறித்து தீர்க்கமாய் அறிந்திருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் உள்ள இந்த முன்னறிவிப்புகளைக் குறித்தும், ஏறக்குறைய அணுகுண்டு யுத்தம் மிகவும் சமீபமாயிருக்கிறது என்றும், அது டிசம்பரிலிருந்து ஜனவரி வரை இருக்கும் என்பதைக் குறித்தும் பேசக் கேட்டுக்கொண்டிருந்தேன். நல்லது, அது சரியாக…அது அப்படியே சரியாகத்தான் இருக்கிறது. அவர்கள் அதை பிரகடனம் செய்து, அதை துவக்குவார்கள், அதன் பின்னர் ஒரு சில குண்டுகள், அவைகள் அதனை தீர்த்து வைக்கும். எனவே தேசம் ஒரு அணுகுண்டு யுத்தத்தில் தப்பிப் பிழைக்க முடியாது. நம்மால் அதை செய்யவே முடியாது. ஆனால் அது கிறிஸ்தவனை அச்சுறுத்துகிறதில்லை அல்லது ஒரு கிறிஸ்தவனை அச்சுறுத்தி கலக்கமுண்டாக்காது. நம்முடைய கர்த்தர் வருகிறதற்காக காத்திருக்கவும், நாம் எந்த நிமிடத்திலும் ஆயத்தமாயும் இருக்க வேண்டும். ஓ, அநேக முறை, பாருங்கள், இவை… 17 இது ஒலிப்பதிவு செய்யப்படவில்லை, இது சரியாக இங்கே வீட்டிற்கானதாய் இருக்கிறது. ஒலிநாடாவில் பதிவாகவில்லை, எனவே எவரொருவரிடத்திலும் பேசுவதை அல்லது மற்றவைகளைக் குறித்து நீங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டியதில்லை. இது வீட்டு மந்தைக்கானதாய் இருக்கிறது. 18 நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதை நான் உங்களுக்கு கூறுகிறேன். நான் அணில் வேட்டைக்குப் போய்க் கொண்டிருந்தேன். ஆனால் நான் அவ்வளவு நன்றாக வேட்டையாடிக் கொண்டிருக்கவில்லை. அங்கே அநேக அணில்களும் கூட இல்லை. நான் இப்பொழுது செம்மறியாடு வேட்டைக்காக அலாஸ்காவுக்கு போய்க் கொண்டிருக்கிறேன். 19 ஒருக்கால் சில நபர்களாய் இருக்கலாம், அதிகமான ஜனங்களாயும் இருக்கலாம். எனவே உங்களால் அதை ஒரு ஒலிநாடாவிலோ அல்லது வேறெதிலோ கூறமுடியாது, ஏனெனில் வேட்டையாடுவதில் நம்பிக்கையே இல்லாத அநேக ஜனங்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வெறுமனே ஒரு துண்டு இறைச்சியைக் கொண்டு வந்து கொடுத்தால், நீங்கள் பாருங்கள், வேட்டையாடுவதில் நம்பிக்கையில்லாதிருப்பவர்கள், அவர்கள்தான் அதில் மிகவும் திருப்தியடைகின்றதை நான் எப்பொழுதும் கவனித்திருக்கிறேன். 20 ஒரு சமயம் ஒரு ஸ்திரீ என்னிடம் கூறினது போன்றே, அவள், “சகோ. பிரான்ஹாம், நீர் முயல்களை வேட்டையாடுகிறீர் என்று நீர் என்னிடம் கூறுகின்றீர்” என்றாள். 21 நான் “ஆம் அம்மா” என்றேன். இப்பொழுது நான் அந்த விலையேறப்பெற்ற ஆத்துமாவைக் குறித்து பேசிக்கொண்டிருக்கவில்லை. அவள் கடந்து போய் விட்டாள். 22 அவள், “ஓ அது கேலித்தனமாக இருக்கின்றதே. நீங்கள் அந்த முயல்களை சுடக்கூடாது” என்றாள். ஆக அடுத்தபடியாக…அந்த வேட்டைக்காலம் முடிவுறுவதற்கு முன்னரே அதே ஸ்திரீ என்னிடம், “எனக்கு சில முயல்களை நீர் கொண்டு வருவீரா?” என்றாள். அவள், “எப்பொழுதுமே நான் புசிக்கிறதில் அவைகள்தான் மிகவும் அருமையாய் இருக்கின்றன” என்றாள். நான், “நல்லது, அதைத்தான் நான் ‘பண்பு’ என்றழைக்கிறேன் என்று நான் யூகிக்கிறேன்” என்றேன். புரிகின்றதா? யாரோ ஒருவர், “நீர் என்ன கூறுகின்றீர்?” என்றார். 23 நான், “அந்த ஸ்திரீக்கு ஒரு பண்பு உண்டு” என்றேன். நான், “பண்பு என்றால் ஒருவர் ஒரு முயலைக் கொல்வதற்கு போதுமான தைரியத்தை உடையவராயிராமல், யாரோ ஒருவர் அதைக் கொன்ற பின்னர் அதை சாப்பிடக்கூடியவர். எனவே அதைத்தான் நீங்கள் ‘பண்பு’ என்று அழைப்பீர்கள் என்று நான் யூகிக்கிறேன்” என்றேன். ஓ, நான்…நான் செய்கிறதில்லை… 24 நான் ஒரு பாதுகாவலன். நான் கொல்வதும், வீணாக்குவதும் பயனுள்ளது என்று கருதுவதில்லை. “நீ சாப்பிட ஆயத்தமாய் இருந்தாலொழிய ஒன்றையும் எடுக்காதே” என்று நான் என்னுடைய மைந்தனுக்கும், என்னோடு வேட்டையாடுபவர்களுக்கும் போதிக்கிறேன். புரிகின்றதா? அதை அப்படியே விட்டு விடுங்கள். வெறுமனே ஒரு குறிக்காக ஒரு பறவையை சுடாதே. புரிகின்றதா? அது சரியானது அல்ல…ஒரு நோக்கம் உண்டானால், அதை அங்கேயே வைத்து அதை சுடு. நீ வேட்டையாடுகிறதை நீ புசிக்கப் போகின்றாய், அப்படியானால் அந்த நோக்கத்திற்காகத்தான் அது வைக்கப்பட்டிருக்கிறது. அதை வீணாக்குவதென்பது மற்றெந்த காரியத்தையும் வீணாக்குவது போன்றே இருக்கிறது. பிராணிகளை வெறுமனே ஒரு குறிகளுக்காக சுடுவது, அப்படி செய்வது சரியானது அல்ல. 25 நண்பர்களே, நான் மலைகளுக்குச் செல்லும்போது, “வேட்டைக்கு செல்வதற்காக” நான் அதிகமாக அங்கே செல்கிறதில்லை. தேவனோடு தனிமையாய் இருப்பதற்கே அங்கே போய்க்கொண்டிருக்கிறேன். உங்களில் சிலர், நீங்கள் கவனித்திருப்பீர்களானால், எனக்கு உண்டாயிருக்கிற மகத்தான அனுபவமே, நான் வேட்டைக்கு வெளியிலிருக்கும் பொழுதும், நான் தேவனை சந்திக்கும்பொழுதுதான் உண்டாயிருக்கிறது. 26 என்னுடைய எல்லா அனுபவங்களிலும், அன்றொரு நாள் காலையில், சரியாக அங்கே அணில் வேட்டைக்குப் போயிருந்தபோது உண்டான ஒன்றைப்போன்று எனக்கு உண்டானதேயில்லை. நான் என் ஜீவியத்தில் அநேக காரியங்களையும், அடையாளங்களையும், அற்புதங்கள் முதலானவைகளையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுவரை எனக்கு உண்டாயிருந்த யாதொன்றைக் காட்டிலும் அது என்னை பலமாய் தாக்கியிருந்தது. இப்பொழுது சற்று யூகித்துப் பாருங்கள், கிட்டத்தட்ட பொழுது விடிகின்ற நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. எல்லா இடத்திலும் மேக மூட்டமாக இருந்தது, எனக்கு முனபாக ஒரு குன்றின மேல் ஒரு கோப்பை இருப்பதுபோன்று மூன்று வானவில்கள் ஒன்றிற்கு மேல் ஒன்றாக உயர உயரமாக, நீங்கள் அவ்வளவாய் முழுமையாக மறுத்துப்போய் பேசமுடியாமல் போகுமளவிற்கு எழும்பினதை நான் நின்று கவனித்தேன். பின்னர் அதற்கு நெருக்கமாக சற்று நடந்து சென்றபோது, நாம் பிரசங்கித்துக் கொண்டிருக்கிற இந்த செய்தியை அவர் சத்தியம் என்று பேசி உறுதிப்படுத்துகின்றதை நான் கேட்டேன். புரிகின்றதா? 27 “புதிய ஏற்பாட்டின் இயேசுவானவர் பழைய ஏற்பாட்டின் யேகோவாவாக இருக்கிறார். அவர் வெறுமனே அவருடைய திரையை மாற்றிக் கொண்டார்” என்று கூறப்பட்டது. நல்லது, நான் அமர்ந்து அதை தியானித்தேன். நான் அதே வார்த்தையை கண்டறிந்தேன். அங்கே அவர், “அவருடைய முகரூபத்தை மாற்றிக் கொண்டார்” என்று பொருள்படுகிறது. சரியாக அப்படியே அவருடைய திரையை என்றல்ல. ஆனால் அவருடைய “முகமூடியை” என்றுள்ளது. “அவர் மறுரூபமானார்” என்ற ஸ்தானத்திற்கு அது வருகின்றது, பாருங்கள், அதற்கு அவர் “அவருடைய விதத்தை மாற்றினார்” என்று அர்த்தமாகிறது. அவர் யேகோவாவாக, தேவனாக இருந்தார். தேவன், யேகோவா, தம்மைத்தாமே ஒரு ஆவியிலிருந்து மாற்றிக்கொண்டு ஒரு மனிதனாக ஆனார். அவர் அதே யேகோவா தேவனாகவே இருக்கிறார். அது என்னவென்றால் பிதாவாக இருந்தார், இது குமாரனாக இருக்கிறது, ஆனால் அதே நபராக இருக்கிறார். 28 ஆகையால் எப்படியாய் அவர் பேசுவதற்கு ஒரு காரியத்தை எனக்கு கொடுத்தார். கர்த்தர் சித்தமாயிருக்கிறார், நான் காலையில் ஏறத்தாழ பொழுது விடியும்பொழுது அதே மரத்தண்டையிலே இருக்க நோக்கமாயிருக்கிறேன். அவர் மீண்டுமாய் எனக்கு காட்சியளிப்பார் என்று நான்—நான் நம்புகிறேன். அவர் செய்வார் என்று—நான் நம்பிக்கையாயிருக்கிறேன், அதன் மூலமாய் நான் என்ன செய்ய வேண்டுமென்பதை அறிந்துகொள்ள முடியும். நான் ஜனங்களுக்கான ஒரு பாரத்தை என்னுடைய இருதயத்தின் மேல் உடையவனாயிருக்கிறேன். வேளையானது நெருங்கிக்கொண்டிருக்கிறதை நான் காண்கிறபோது, என்னுடைய அன்புக்குரியவர்களும், ஜனங்களும் ஆயத்தமாய் இல்லை என்பதை அறிந்துகொள்கிறேன். என்ன செய்வது அல்லது சொல்வது என்று நான் அறியாதிருக்கிறேன். அவர் எனக்கு என்ன சொல்லுவார் என்பதைக் காண நான் மேலே சென்று கொண்டிருக்கிறேன். எனவே எனக்காக ஜெபத்தில் இருங்கள். 29 பின்னர் நான் நாளை பிற்பகல் அல்லது செவ்வாய் கிழமை காலையில் புறப்பட்டுச் செல்கிறேன். இங்கே சபையிலுள்ள ஒரு சகோதரனும் நானுமாய் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு புறப்பட்டுச் செல்கிறோம். நான் ஒரு—ஒரு கூட்ட பெந்தேகொஸ்தே ஊழியக்காரர்களோடு போகிறேன். அது பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பயணமாயுள்ளது. அதற்காக ஒரு சல்லிக்காசும் எனக்கு செலவாவதில்லை. அவர்கள் அந்தப் பயணத்தை பொறுப்பேற்றுக்கொண்டனர். ஒரு வழிகாட்டியையும் ஏற்படுத்தியுள்ளனர். அந்த வழிகாட்டி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு பெந்தேகொஸ்தே சகோதரனாய் இருக்கிறார். அதன் பின்னர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படியாக எனக்கு சில ஜனங்கள் இருக்கின்றனர். நான் அங்கே உயரே இருக்கும்போது, அவர்கள் கண்ணி வைத்தல் போன்ற காரியங்களை செய்பவர்கள், இந்தக் கண்ணி வைக்கும் நார்வே நாட்டை சேர்ந்தவர்கள் வெளியில் சென்ற இந்த ஒலிநாடாக்களின் மூலமாக வெளிச்சத்தைக் கண்டவர்கள். அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் நான் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். 30 பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஊழியர் சங்கத்தலைவரை நான் அடுத்த சனிக்கிழமை மாலையில் பிரிட்டிஷ் கொலம்பியா டாசன் கிரீக்கிலுள்ள பைன் விடுதியில் அவரை சந்திக்க வேண்டியிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதற்கு அவர் பசியாயும், தாகமாயும் இருக்கிறார். 31 எனவே நீங்கள் பாருங்கள், நண்பர்களே, அது முழுவதுமே வேட்டையாடுதலாய் இருக்காது. இந்த முறை என்னோடு வருகின்ற ஒவ்வொரு பிரசங்கியையும், இந்த வழிகாட்டியையும், நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்காக ஜெபியுங்கள். புரிகின்றதா? இது உண்மையென்று நான் அறிவேன், அது தேவனைக் காணும்படியாக என்னுடைய இருதயத்தில் பசியையும், தாகத்தையும் உண்டாக்குகிறது. 32 இப்பொழுது நாம் வார்த்தையை அணுகுவதற்கு முன்னர் நான் உங்களுடைய நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். நாம் எங்கே ஜெபிக்கப் போகிறோம் என்பதை கண்டறியும்படியான ஒரு இடத்தை நாம் கண்டறியும் வரையில், நான் சில வேத வாக்கியங்களிலிருந்து ஒரு சிறு காரியத்தை போதிக்க விரும்புகிறேன். மேலும்… 33 இங்கே யாரோ நின்று கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். [சபையிலிருந்து யாரோ ஒருவர் பேசுகிற காரணத்தால் சகோதரன் பிரான்ஹாம் பேசுவதை நிறுத்துகிறார்.—ஆசி.] என்னை—என்னை மன்னிக்கவும், சற்று நெருக்கமாக உள்ள யாராவது அதை சொன்னீர்களா? அந்த சகோதரன் என்ன கூறினார் என்பதை நான் சரியாக கேட்கவில்லை…[யாரோ ஒருவர், “அவருடைய குழந்தையை நீர் பிரதிஷ்டை செய்ய அவர் விரும்புகிறார்” என்கிறார். ஆசி.] அவருடைய குழந்தையை பிரதிஷ்டை செய்ய வேண்டுமா? நிச்சயமாக என் சகோதரனே. ஆம் ஐயா. இப்பொழுது உம்முடைய குழந்தையை மேலே கொண்டு வாருங்கள். நாங்கள் அதைச் செய்ய சந்தோஷப்படுவோம். 34 இப்பொழுது நான்—நான் இதில் விசுவாசமாயிருக்கிறேன். இப்பொழுது, அவர்கள் வருவதற்கு முன்னதாக நான் அதை ஜனங்களுக்கு விளக்கிக் கூறட்டும். 35 சகோதரன் ஆர்னால்ட் (Arnold) உள்ளே இருக்கிறாரா? டெடியா? சகோதரன், “ஆம்” என்கிறார்.—ஆசி.] சரி. எங்களுக்காக நீர் இசைப் பேழையண்டை (Piano) வருவீரானால் நலமாயிருக்கும். 36 இப்பொழுது அநேக ஜனங்கள் இந்த சிறு குழந்தைகளுக்கு தெளிக்கிறார்கள். அவர்கள் அதை குழந்தை ஞானஸ்நானம் என்றழைக்கின்றனர். இப்பொழுது உங்களுடைய சபை அதைச் செய்கிறதென்றால் அதெல்லாம் பரவாயில்லை. ஆனால், நீங்கள் பாருங்கள், அவர்கள் அதைச் செய்தால், அது சபையின் ஒரு ஒழுங்காக இருக்கிறது. அது ஒரு வேத வார்த்தையின்படியாய் உள்ளதல்ல. உங்களுடைய தெளிப்பு ஞானஸ்நானத்திற்கு வேத வார்த்தைகள் ஆதரவு கொடுக்கிறதில்லை. 37 வேத வார்த்தையானது தெளித்தலை, எந்த விதத்திலும் ஆதரிக்கிறதில்லை. வேதாகமத்தில் எந்த நபரும் ஒருபோதும் தெளிக்கப்பட்டதே கிடையாது. அவர்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால்தான் முழுக்கு ஞானஸ்நானம் பெற்றார்கள். 38 ஆனால், இப்பொழுது, வேதாகமத்தில், அவர்கள் குழந்தைகளை கொண்டுவந்து அவைகளை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்தார்கள். அவர்கள் சிறு பிள்ளைகளை கொண்டுவந்து, அவர்களை கர்த்தராகிய இயேசுவின் கரத்தில் கொடுத்து, அவர்களை கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்தார்கள். 39 அதெல்லாம் சரிதான், சகோதரியே, உங்களுடைய சிறு பிள்ளையை மேலே கொண்டு வாருங்கள். இன்னும் வேறு யாராவது சிறு பிள்ளைகளை, அவர்களுடைய சிறு பிள்ளைகளை வைத்திருந்து, அவர்களை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று விரும்பினால், ஏன், நாங்கள் அதைச் செய்ய சந்தோஷப்படுவோம், இதை நம்முடைய சிறு பிள்ளைகளுக்கான ஒரு பிரதிஷ்டை ஆராதனையாக ஆக்குவோம். இப்பொழுது வேதத்தில் இயேசுவானவர்… 40 இப்பொழுது நாம் இங்கே சபையில் எல்லாவிதமான ஸ்தாபனங்களோடும் கலந்திருக்கிறோம். அவர்களில் சிலர் புரொட்டஸ்டென்ட், சிலர் கத்தோலிக்கர்கள், யூதர்களும் கூட இங்கே வந்திருக்கிறார்கள். அதாவது மரபு வழுவாத யூதர்கள். அந்தக் காரணத்தினால்தான் நாம் நம்மை “ஸ்தாபன பாகுபாடற்றவர்கள்” என்று கண்டிப்பாக அழைத்துக் கொள்கிறோம். 41 இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இந்த சபையானது ஒரு வேத வார்த்தையின்படியே சபையாய் இருக்கவும், வேதத்தோடு சரியாய் நிலைத்திருக்கும்படியாயுமிருக்க நாங்கள் முயற்சிக்கிறோம். எந்த இடத்திலும் வேதம் என்ன கூறுகிறதோ சரியாக அந்த விதமாகவே நாங்கள் அதைப் பின்பற்றுகிறோம். இப்பொழுது முதலாவது சபையும், எல்லா கிறிஸ்தவர்களும், ஊழியக்காரர்களாகிய நீங்களும், இது முதலாம் சபையின் வரலாறு என்பதை ஒப்புக் கொள்வீர்கள். நாம் யாவரும் அதை அறிந்திருக்கிறோம். சரியாக இதுதான் சம்பவித்தது. 42 அண்மையில் ஒரு பாதிரியாரிடத்தில், இங்கே அந்த வீதியில் வசித்து வருகிற ஒரு கத்தோலிக்க பாதிரியாரிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அவர் “திரு. பிரான்ஹாம், நீர் ஒரு கத்தோலிக்கரல்லாதவரா அல்லது ஒரு பிராட்டஸ்டென்ட்டா?” என்று கேட்டார். அதற்கு நான், “ஒரு பிராட்டஸ்டென்ட்” என்றேன். அவர், “அப்படியானால் நீர் எங்களுக்கு மறுப்பு தெரிவிக்கிறீர்” என்றார். 43 நான், “அதற்கு இல்லை ஐயா, நான் ஜனங்களுக்கு மறுப்பு—மறுப்பு தெரிவிக்கவில்லை. சபைக்கு, சபையின் உபதேசங்களுக்கு மறுப்பு தெரிவிக்கிறேன்” என்றேன். அவர், “அப்படியானால் நீர் உம்மை பாப்டிஸ்டு அல்லது பிரஸ்பிடேரியன் என்று அழைத்துக் கொள்கிறீரோ” என்றார். நான், “இல்லை ஐயா, வெறுமனே ஒரு கிறிஸ்தவன்” என்றேன். 44 அவர் “நல்லது, உம்முடைய உபதேசத்தின் முறைமையை எதிலிருந்து உருவாக்குகிறீர்? ஒரு கிறிஸ்தவனாய் இருக்க, ஒரு உபதேசத்தை உருவாக்க, உமக்கு ஒரு அடிப்படை இருக்க வேண்டும்” என்றார். நான், “அது உண்மைதான்” என்றேன். நான், “அது வேதாகமாக இருக்கிறது” என்றேன். “நல்லது”, அவர் “அது கத்தோலிக்க சபையின் வரலாறு ஆயிற்றே” என்றார். நான் அதற்கு, “நல்லது, அப்படியா, அப்போஸ்தலர்கள் கத்தோலிக்கர்களா?” என்றேன். அவர், “ஆம் ஐயா” என்றார். 45 நான் “சரி, நான் அது சரிதான் என்று ஒப்புக்கொள்ளப்போகிறேன்” என்றேன். அவர்…நான், “அப்படியானால் நீங்கள் ஏன் வேதவார்த்தைகளோடு தரித்திருக்கவில்லை” என்றேன். 46 அதற்கு அவர், “நீங்கள் பாருங்கள், அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வேத வார்த்தையை மாற்றிக்கொள்ள கிறிஸ்து சபைக்கு அதிகாரம் கொடுத்து விட்டார்” என்றார். 47 நான், “நல்லது”, “அப்படியானால் நீங்கள் அதை மாற்றியிருக்கிறீர்கள், இன்றைக்கு அது இருக்கின்ற விதமாக நீங்கள் அதை ஏற்படுத்திக் கொண்டீர்களா?” என்றேன். ஆம், “ஆம் ஐயா” என்றார். 48 நான், “அப்ப்டியானால் நான் ஒரு காரியத்தை கேட்க விரும்புகிறேன். அப்படியானால் கிறிஸ்து அதனோடு பிரியமாயிருக்க வேண்டியிராது, ஏனென்றால் முதலாவது சபையின் மேல் அவர் பரிசுத்த ஆவியை ஊற்றினர். அவர்கள் வியாதியஸ்தரை சுகப்படுத்தினர், மரித்தோரை எழுப்பினர், பிசாசுகளை துரத்தினர் மகத்தான வல்லமையுள்ள அற்புதங்களை முதல் கத்தோலிக்க சபையின் உபதேசத்தின் கீழே செய்தனர். அவர்கள் உபதேசத்தை மாற்றிக்கொண்டது முதற்கொண்டு இவைகள் கத்தோலிக்க சபையில் காணப்படவில்லையே” என்றேன். 49 எனவே இப்பொழுது நாம் திரும்பிச்சென்று மூல கத்தோலிக்கர்களாக இருப்போமாக. அவர்கள் என்னவாக இருந்தார்கள் என்று வேதம் கூறுகின்றதோ, அவ்விதமாய் இருக்க நாம் திரும்பிச் செல்வோம். கிறிஸ்து அவர்களோடு நடந்தார். நண்பர்களே, அந்த காரணத்தினால் தான் நாம் எந்த சபையையும், சபையிலிருக்கிற எந்த ஜனங்களையும் நாம் கண்டனம் செய்ய முயற்சிக்கிறதில்லை. ஆனால் நாம் வேதத்தில் கூறப்பட்டிருக்கிற பிரகாரமாக அதை காத்துக்கொள்ளவே முயற்சிக்கிறோம். 50 இப்பொழுது, வேதத்தில் ஒரு பிள்ளையும் ஒருபோதும் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. வேதத்தில் எந்த இடத்திலும் ஒரு குழந்தைக்கும் தெளித்ததாக ஒருபோதும் இல்லை. ஆனால் வேதத்தில் இங்கே, “சிறு பிள்ளைகளின் மேல் அவர் கைகளை வைத்து ஜெபம் பண்ணும்படிக்கு அவர்களை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தார்கள்” என்று இருக்கிறது. அவர், “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” என்றார். இப்பொழுது அது முற்றிலும் உண்மையே. ஆகையால் இப்பொழுது நாம் சிறு பிள்ளைகளை தாய்மார்களின் கரங்களிலிருந்து அல்லது தகப்பன்மார்களின் கரங்களிலிருந்து கொண்டு வந்து, உள்ளார்ந்த உத்தமத்தில், அவர்களை பிரதிஷ்டை செய்ய நம்முடைய பரலோக பிதாவினிடத்தில் ஒப்படைக்கிறோம். 51 என்னுடைய பிள்ளைகளில் இன்னும் ஞானஸ்நானம் பண்ணப்படாமல் இருக்கின்ற இரண்டு பிள்ளைகள் எனக்கு உண்டு. ஆனால் அவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். எனக்கு மகிமையில் ஒரு குழந்தை உண்டு, அதற்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது, ஆனால் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. 52 ஏனென்றால், பாருங்கள், நீங்கள் மனந்திரும்பியிருக்கிறீர்கள் என்பதை காட்டுவதே பாவமன்னிப்பிற்கான ஞானஸ்நானமாய் இருக்கிறது. மனந்திரும்பத்தக்கதாக அந்த குழந்தையானது ஒன்றும் செய்யவில்லை. அது ஒரு குழந்தையாய் இருக்கிறது. ஆகவே இங்கே வருவதற்கு எந்த வல்லமையும் அதனிடம் இல்லை. பாருங்கள், அதனிடத்தில் பாவமே இல்லை. கிறிஸ்துவானவர் சிலுவையில் மரித்தபோது, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க அவர் மரித்தார். மனந்திரும்பும்படியாக இந்த பிள்ளை எதையாவது செய்யும்வரைக்கும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பாவநிவாரணம் செய்கிறது. 53 ஆனால் இப்பொழுது தாயும் தகப்பனும், அந்த பிள்ளையை கொண்டு வந்து, தேவனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பிள்ளையை திரும்பவும் தேவனுக்கு அளிக்க பெற்றோர்களுக்கு உரிமை உண்டு. 54 அன்னள் தேவாலயத்தில், அவள் வாக்களித்திருந்தாள். அவள் மலடியாய் இருந்தாள். அவள் வயது சென்றவளாயிருந்தாள். அவளுக்கு பிள்ளையே இல்லாதிருந்தது. ஆசாரியன் நடந்து சென்று, அவள் வெறித்திருக்கிறாள் என்று குற்றம் சாட்டுமளவிற்கு அவள் பீடத்தண்டை அவ்வளவு உத்தமமாய் ஜெபித்தாள். தேவன் அவளுக்கு ஒரு பிள்ளையை தரும்படியாய் அவள் பீடத்தண்டை கூக்குரலிட்டுக்கொண்டும், அழுது கொண்டும் இருந்தாள். அவள், “தேவனே, நீர் எனக்கு ஒரு பிள்ளையை கொடுத்தால், நான் அதை திரும்பவும் இந்த இடத்திற்கே கொண்டு வந்து அதை உமக்கே கொடுத்து விடுவேன்” என்றாள். 55 தாய்மார்களே, அந்தவிதமாகத்தான் நீங்கள் உங்கள் பிள்ளையை பெற்றுக் கொண்டீர்கள். தேவன் உங்களுடைய பிள்ளையை உங்களுக்கு கொடுக்கிறார். அவளுடைய பிள்ளையை, அன்னாளுக்கு கொடுத்தது போன்றே இது உள்ளது. பிரதிஷ்டை ஆராதனையில் குட்டி சாமுவேலுக்கு அன்னாள் செய்தது போன்றே, இப்பொழுது இன்றிரவு நீங்கள் உங்களுடைய குழந்தைகளை திரும்ப தேவாலயத்திற்கு கொண்டு வருகிறீர்கள். இப்பொழுது உங்களுக்கு அதை கொடுத்த தேவனிடத்தில் ஜெபத்தினால் நாங்கள் பிரதிஷ்டை செய்து, உங்களுடைய பிள்ளையை திருப்பித் தருகிறோம். இன்றிரவு இங்கே நின்று கொண்டிருக்கும் இந்த சிறு பையன்களும், பெண்களும், கர்த்தருக்கே நீங்கள் திருப்பிக் கொடுக்கின்ற அவர்கள், பண்டைய சாமுவேலைப் போன்று தீர்க்கதரிசிகளாயும், தீர்க்கதரிசினிகளாயும் இருப்பார்களாக என்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது, சபையார் தங்களுடைய தலைகளை அப்படியே ஒரு வினாடி வணங்கினால் நலமாயிருக்கும். 56 மிகுந்த நேசமும், கிருபையுமுள்ள தேவனே, நாங்கள் சென்ற பிறகு, வந்து கொண்டிருக்கிற தலைமுறைக்காக, இந்த வேளையிலே நாங்கள் உம்முடைய இரக்கமும், கிருபையுமான சிங்காசனத்தை அணுகுகிறோம். இங்கே நின்று கொண்டிருக்கின்ற இந்த சிறு பையன்களை, அவர்களை இவர்கள் பிடித்துக் கொண்டு இருக்கின்றனர். இன்றிரவு தங்களுடைய தாயின் கரங்களிலும், தகப்பனின் கரங்களிலும் பிடித்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நாளைய இனத்தின் வித்துக்களாய் இருக்கிறார்கள். அவர்கள் சரியான துவக்கத்தைப் பெறுகிற நிச்சயமுடையவர்களாய் இருக்கும்படிக்கு இந்த தாய்மார்களும் தகப்பன்மார்களும் இந்த சிறியவர்களை இங்கே உயரே பிரதிஷ்டை செய்யும்படியாய், அவர்களுடைய சிறிய ஜீவியங்களை ஜீவிக்கின்ற தேவனுக்கு கொடுக்கும்படியாய் அவர்களை கொண்டு வருகிறார்கள். 57 பிதாவே, போதகரும் நானும் முன்னாக நடந்து வந்து இந்த சிறு குழந்தைகளை பிரதிஷ்டை ஜெபத்தோடு உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறோம். எங்கள் பிதாவே, அவர்களை ஆசீர்வதியும். உம்முடைய சிறிய ஊழியர்களாய் அவர்கள் இருக்கும்படியாக நீர் அவர்களை ஆசீர்வதியும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் நீண்ட காலம் ஜீவித்து, சந்தோஷமாக இங்கே பூமியின் மேல் ஜீவித்து, கர்த்தராகிய இயேசுவின் வருகையை காணுவார்களாக. அது மாத்திரமல்ல, அவர்கள் நீண்ட காலம் ஜீவிப்பவர்களாயும், ஆரோக்கியமானவர்களாயும், சந்தோஷமான ஜீவியத்தை உடையவர்களாயும், உம்முடைய ஊழியக்காரர்களாயும் இருப்பார்களாக. நீரே அவர்களை வழிநடத்துவீராக. நாளை என்ற ஒன்று வருமானால், இந்தப் பிள்ளைகளைக்கொண்டு நாளைய தினத்திற்காக நீர் பிரசங்கிமார்களையும், பாடகர்களையும், சுவிசேஷகர்களையும், ஊழியக்காரர்களையும் உருவாக்குவீராக. இதை அளியும் கர்த்தாவே. எப்படி என்று நாங்கள் அறிந்த மேலான வழியிலே, நீர் எங்களுக்கு விட்டுச் சென்றதான, பரிசுத்த வார்த்தையாகிய உம்முடைய வேத வார்த்தையின்படியாய் நாங்கள் அவர்களை உம்மிடத்தில் பிரதிஷ்டை செய்கிறோம். 58 அதாவது வேதத்தின் கடைசி புத்தகத்தில், “இதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டாலும் அல்லது கூட்டினாலும் அந்த மனிதனை ஜீவ புஸ்தகத்திலிருந்து தேவன் நீக்கிப் போடுவார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் வேதமானது தேவனுடைய புனிதமான வார்த்தையாயிருக்கிறது என்பதை நாங்கள் உணருகிறோம். நாங்கள் ஒரு காரியத்தையும் அதனோடு கூட்ட முடியாது அல்லது அதிலிருந்து ஒரு காரியத்தையும் எடுக்கவும் முடியாது. ஆகையினால் கர்த்தாவே, நீர் அதைத் தந்த வண்ணமாகவே அப்படியே அதை விட்டு விட்டு, அதை போதித்து, உம்முடைய கிருபையினால் அதன்படியாய் ஜீவிக்க முயற்சிக்கிறோம். 59 கடந்துசென்ற நாட்களில் அவர்கள் பிள்ளைகளை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தது போல, நாங்கள் இந்தப் பிள்ளைகளை பிரதிஷ்டை செய்கிறோம். இன்றிரவு இங்கே அவர் பூமியின் மீது சரீரப்பிரகாரமாக இருந்திருப்பாரானால், இந்த தாய்மார்களும், தகப்பன்மார்களும் அவருடைய பாதத்தண்டைக்கு வேகமாய் தங்களுடைய சிறு பிள்ளைகளை கொண்டு வருவார்கள். அப்பொழுது அவர் தன்னுடைய கரங்களை அவர்கள் மேல் வைத்து அவர்களை ஆசீர்வதிப்பார். கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு நீர் உன்னதத்திலிருக்கிற மகா கனம் பொருந்தியவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறீர். நாங்கள் இங்கே உம்முடைய ஊழியர்களாய் விடப்பட்டிருக்கிறோம். நாங்கள் எங்களுடைய கரங்களை அவர்கள் மேல் வைத்து, உம்மண்டை ஜெபத்தில் இருக்கையில், நீர் அவர்களுடைய சிறிய ஜீவியங்களை எடுத்து, அவர்களை உம்முடைய மகிமைக்காக உபயோகிப்பீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் [இசைப் பெட்டியை இசைப்பவர் அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள் என்னும் பாடலை இசைக்கத் துவங்குகிறார்.—ஆசி.] 60 உங்களுக்கு ஒரு சிறு பிள்ளை உண்டா? அவனுடைய பெயர் என்ன? ஜான். சகோதரியே கடைப்பெயர் என்ன? [தாயார், “மையர்” என்கிறாள்.—ஆசி.] மையர். ஓ! இது சிறிய ஜான் மையரா? அன்றொரு நாள் இந்த சிறு பிள்ளைக்காக நாங்கள் ஜெபித்திருந்தோம். இன்றிரவு இதோ அவன் நம்மோடு இருக்கிறான். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 61 கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு நானும், உம்முடைய மேய்ப்பனும் ஒன்று சேர்ந்து தந்தையைப் போன்றே காணப்படுகின்ற இந்த சிறுவனை இந்தத் தாயின் கரங்களிலிருந்து பெற்றுக் கொள்கிறோம். வருகின்ற நாட்களில் இந்த சிறுவனைக் குறித்ததான மகத்தான எதிர்பார்த்தல்கள் உண்டாயிருக்கும். இப்பொழுதும் கர்த்தாவே நான் இந்த சிறு ஜான் மையரை உம்முடைய சேவைக்காக உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறேன். நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவனை தேவனிடத்தில் பிரதிஷ்டை செய்கிறோம். ஆமென். 62 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் இந்த சிறுவனை ஆசீர்வதிப்பாராக. அவனை மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு…?… 63 ஐயத்துக்கிடமின்றி இது சம்பவித்துவிட்டது. அதே நேரத்தில் நீங்கள் இந்த சிறுமியை பெற்றீர்கள் என்று நான் கருதுகிறேன், ஆனால் அது எனக்குத் தெரியவில்லை. அவளுடைய பெயர் என்ன? [தாயார், “எலிசபெத் காலின்ஸ்” என்கிறார்.—ஆசி.] எலிசபெத் காலின்ஸ். சரி எனக்கு அவரைத் தெரியும்; அவரே அதைக் கூறுவார். நான் அதை அறியேன். பார்த்தீர்களா? ஆனால் சிறுமி எலிசபெத் காலின்ஸ். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். 64 பரலோகப் பிதாவே மற்றொரு சிறிய அன்னாளை உருவாக்கும். இவளை கர்த்தருக்கென்று ஒரு ஊழியக்காரியாக ஆக்கும். இவளை ஆசீர்வதியும். தங்களுடைய—தங்களுடைய வீட்டில் இருக்கும் இவளுடைய தகப்பனையும், தாயையும் ஆசீர்வதியும். இவள் தேவனுடைய மகிமைகென்றே ஜீவிப்பாளாக. இதை அருளும். கர்த்தாவே நாங்கள் எலிசபெத் காலின்ஸை, இவளுடைய ஜீவியப் பிரதிஷ்டையில் உம்மண்டை சமர்ப்பிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 65 நீங்கள் மேலண்டை எழும்பி வரக்கூடுமானால் அற்புதமாயிருக்கும்.நீங்கள் வருவீர்களா? இவளுடைய பெயர் என்ன? [தாயார், “டாவன்னா கேல் ஸ்டேட்டன்” என்கிறார்.—ஆசி.] டாவன்னர் கேல் [“ஸ்டேட்டன்”] ஸ்டேட்டன். அதுதானே. டாவன்னா கேல். 66 இது சிறுமி டாவன்னா கேக் ஸ்டேட்டன். இவளுடைய தாயும் மற்றவர்களும் சரியாக சபைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்,…ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியையும் பெற்றுக் கொண்டனர். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். 67 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இந்த வாலிப தாய் தகப்பனின் துணிவையும், இவளுடைய வருகையும், இவள் இருக்கின்ற விதத்தில் இவள் அடைந்துள்ள வளர்ச்சியையும் வியந்து பாராட்டுகிறோம். எவ்வளவாய் நீர் இந்த இளமையான, கனிவுள்ள இருதயங்களை ஆசீர்வதித்திருக்கின்றீர். நாங்கள் இந்த அன்புகுரிய சிறுமியை உம்மிடத்தில் சமர்ப்பிக்கிறோம். கர்த்தாவே, நீர் அவளுடைய சிறிய ஜீவனை ஆசீர்வதியும். அவள் உம்முடைய ஊழியக்காரியாக இருப்பாளாக. அவளுடைய தகப்பனையும், தாயையும் ஒருசேர ஆசீர்வதியும். அவள் எப்பொழுதுமே தேவனுடைய போதனையின் கீழான ஒரு கிறிஸ்தவ வீட்டில் வளர்க்கப்படுவாளாக. நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறோம். ஆமென். 68 சிறுமி டாவன்னா ஸ்டேட்டன் தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் ஸ்டேட்டன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 69 இனிமையான சிறுமியே எப்படி இருக்கிறாய்? அப்படியே ஒரு நிமிடம் இங்கு வருவாயா? ஹு? நான் முடிந்தால்…இனியவளே, நீ சரியாக இங்கேயே, இங்கேயே நில். சகோதரனே, அவளுடைய பெயர் என்ன? [அந்த சகோதரன் “அன்னாள்” என்று கூறுகிறார்.—ஆசி.] சகோதரன் கிரீச்…சிறியவளாய் இருக்கிறாள்…ஆம், நீ சிறுவன் ஆலன் தானே. அவ்வளவு அழகு, பாருங்கள், நல்லது, இது—இது சிறுமி அன்னாள் கிரீச். ஒருநாள் நான் அவளை தூக்கும்படி அவள் அனுமதிக்கலாம். அவள் ஒரு இனிமையான சிறுபெண். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். 70 பரலோகப் பிதாவே, இப்பொழுது நாங்கள் தன்னுடைய தாயினுடைய பாதத்தண்டையில் இருக்கின்ற இந்த சிறு குழந்தையை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறோம். பரலோகப் பிதாவே, நீர் அவளை ஆசீர்வதிக்கும்படியாயும், அவள் ஜீவியத்தை உம்முடைய ராஜ்ஜியத்தின் கருவியாக ஆக்கிக்கொள்ளும்படியாகவும் நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். அவளுடைய தாயையும், தகப்பனையும் ஆசீர்வதியும். இந்த குழந்தையானது ஒரு கிறிஸ்தவ வீட்டிலே தேவனுடைய போதனையில் வளர்க்கப்படுவதாக. நாங்கள் எங்களுடைய கரங்களை அவள் மீது வைத்து, அவள் உமக்கு ஒரு சேவை செய்வதற்காக, அவளுடைய வாலிப ஜீவியத்தை உம்மிடத்தில் பிரதிஷ்டை செய்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். இந்தக் காலையில் நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக. நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக! 71 அவன் வரவில்லையா? பெயர் என்ன? என்ன? டானா? [“டான்…? பென்யமீன்”] பென்யமீன்—பென்யமீன்…? [“சரி சிறுவன் பென்யமீன்”] இதுதான் பென்யமீன்…?…[“அது சரி.”] சிறிய சகோதரனும், சகோதரியும் நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 72 எங்கள் பரலோகப் பிதாவே, என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியும்படியாய், கர்த்தாவே, நாங்கள் இந்த அன்புக்குரிய மிக இளஞ்சிறுவனை உம்மண்டை ஒப்புவிக்கிறோம். ஆனால் நீர் எல்லா காரியங்களையும் அறிந்திருக்கிறீர். கர்த்தாவே, நீர் அவனுடைய சிறு ஜீவனை ஆசீர்வதியும் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். அவனுடைய வீட்டை ஆசீர்வதியும். மேலும் கர்த்தாவே, இந்த சிறுவன் தேவனுடைய மகிமைக்கென்று, நல்லபடியாகவும், நீண்டகாலம் மகிழ்ச்சியாயும் வாழ்வானாக. கூடுமானால் அவன் கர்த்தராகிய இயேசுவின் வருகைகையும் காண்பானாக. இதை அருளும் கர்த்தாவே. நாங்கள் அவனை உம்முடைய சேவைக்காக உம்மண்டை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிரதிஷ்டை செய்கிறோம். ஆமென். 73 அது ஒரு…[யாரோ ஒருவர், “பையன்” என்று கூறுகிறார்—ஆசி.] அது ஒரு இனிமையான சிறுவன். பார்த்தீர்களா? பென்யமீன்…? என்னே, இது என்ன ஒரு பெரிய பையனாய் இருக்கிறதே! என்னே!…?…ஓ, என்னே! 74 இப்பொழுது கவனியுங்கள். இந்த சிறுவன் அவனை பிடித்துக் கொண்டிருக்கிறேன். பெயர் என்ன? [தகப்பனார், “வில்லியம் டேவிஸ்” என்று கூறுகிறார்—ஆசி.]…?…சிறுவன் வில்லியம் டேவிஸ். நிச்சயமாகவே அந்த சிறுவனுக்கு அருகில் சரியாக அன்புக்குரிய ஒரு சிறு பையன். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 75 கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் இந்த அன்பான சிறு பையனை உம்முடைய சேவைக்காக உம்மண்டை ஒப்புவிக்கிறோம். கர்த்தாவே, தாயும் தகப்பனும் அவன் தேவனுடைய மகிமைக்காக பயன்படும்படிக்கு அவனை மேலே கொண்டு வந்திருக்கிறார்கள். ஆகையால் இப்பொழுதும் கர்த்தாவே, கடந்துபோன நாட்களில் சம்பவித்ததிலிருந்து வாசிக்கும்போது, அவர் தம்முடைய கரங்களை இந்தவிதமாய் அந்த சிறு குழந்தைகளின் மீது வைத்து அவர்களை ஆசீர்வதித்தார் என்றே உள்ளது. எங்கள் கரங்களோ அவருடைய பிரதிநிதித்துவத்தில் குறைபாடுள்ளதாகவே இருக்கின்றன. ஆனால் நாங்கள் அவருடைய நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம். இந்தக் குழந்தையை ஒரு சேவையுள்ள ஜீவியத்திற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மண்டை ஒப்புவிக்கிறோம். ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்களாக! [தகப்பனார், “போதகரே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று கூறுகிறார்.—ஆசி.] 76 திருமதி போவர்ஸ்…? இதோ, இனியவளே, உன்னுடைய பெயர் என்ன? ஓ, என்னே! [யாரோ ஒருவர், “சூசி, சூசி என்ற ஒரு பெயர் உண்டு” என்கிறார்.—ஆசி.] அவனுக்கு ஒரு பெயர் உண்டானால் பாருங்கள். நான் உன்னை பற்றிப் பிடிப்பதற்கு மகிழ்ச்சி கொள்வேன். நீ ஒரு நல்ல சிறு பையன். சிறுவன் சூசிபேட். நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். 77 பரலோகப் பிதாவே, பிரகாசமான கண்களைக் கொண்ட இந்த சிறு பெண்…? பாதையில் என்ன கிடக்கிறது என்பதையே அறியாதவனாய் இருக்கிறாள்; எங்களில் எவருக்குமே தெரியாது. ஆனால் தாயும், தகப்பனும், அவர்கள் இடுக்கமும் நெருக்கமுமான வழியில் தரித்திருக்கும்படி விரும்புகிறார்கள். இதைப் பொன்ற ஒரு அழகான சிறு கருவியில், எப்படி சாத்தான் சலசலப்பான ஒலியை எழுப்ப விரும்புவான்? ஆனால் அவர்கள் சாத்தானை அதனிடமிருந்து தூர துரத்தும்படியாய், அதைக் கொண்டு வந்துள்ளனர். கர்த்தாவே உம்முடைய சேவைக்கென்று அவளுடைய சிறு ஜீவனை மறைத்துக் கொள்ளும். நாங்கள் இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். சிறு பெண்ணே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக!…?…சரி. அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், பாவ களத்திலிருந்து அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள்; அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள். அவர்களை உள்ளே கொண்டு வாருங்கள், சிறுபிள்ளைகளை இயேசுவண்டை கொண்டு வாருங்கள். 78 ஓ, எவ்வளவாய்…நீங்கள் சிறுபிள்ளைகளை நேசிக்கிறதில்லையா? ஜனங்கள் சிறு பிள்ளைகளை நேசிக்கவில்லையென்றால் அங்கே ஏதோ ஒரு தவறு உண்டு. இயேசு, “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்” என்றார். ஒருவரும் பிரவேசிக்க மாட்டீர்கள். 79 ஒரு தகப்பனார் இரண்டு சிறு பிள்ளைகளை அங்கு பின்னால் வைத்திருக்கிறார், அதே சமயத்தில் அவர் அவர்களை கொண்டுவர விரும்பினார். நான் அவரிடத்தில், “அவர்களை முன்னாக கொண்டு வாருங்கள்” என்றேன். பார்த்தீர்களா? 80 “நாம் மனந்திரும்பி, இந்த சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால்” என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவர்களுடைய சிறு உணர்வுகளை புண்படுத்த முடியும். அப்பாவும் அம்மாவும் அதை அறிந்துள்ளார்கள், அநேக முறை அவர்கள் தொல்லைக்குள்ளாகும்போது, அவர்களுக்கு ஒரு அடி கொடுக்கின்றீர்கள். ஏன், இரண்டு நிமிடங்களில் அவர்களுடைய சிறு கரங்களை உங்கள் மேல் போட்டுக் கொண்டு, அதைக் குறித்த எல்லாவற்றையுமே மறந்து விடுகிறார்கள். அந்த விதமாகத்தான் நாமும் செய்ய வேண்டும். என்ன சம்பவிக்கிறது என்பதைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை, நாம் அதைப்போன்று ஒருவருக்கொருவர் மன்னிக்கிறவர்களாயும், தயவுள்ளவர்களாயும் இருக்க வேண்டும். சிறு பிள்ளைகளைப் போன்று அந்தவிதமாய் மன்னிக்கவும், மறக்கவும் சித்தமுடையவர்களாய் இருக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் நாம்—நாம் செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆகையால் நாம் அப்படி செய்யும்போது, அப்பொழுது நாம் தேவனுடைய ராஜ்ஜியத்தண்டை நெருங்கி வந்துகொண்டு இருக்கிறோம். 81 இரண்டு பெண் பிள்ளைகளுமே ஒருவிதமாக கூச்ச சுபாவமுடையவர்கள் என்று நான் நினைக்கிறேன். அப்பாவும் அம்மாவும் அவர்களோடு நடந்து செல்ல வேண்டியதாய் இருக்கிறது. நல்லது, அது மிகவும் அருமையாய் இருக்கிறது. நாம் அதை விரும்புகிறோம். நாம் கூச்ச சுபாவங்கொண்ட பெண்பிள்ளைகளையே விரும்புகிறோம். நீங்கள் மிகவும் அபூர்வமாக ஒன்றை காணமுடியாது…ஓ, இவர்கள்தான் அந்த சிறு பாடகர்கள், இல்லையா? பாடுகிறவள் இவள்தானே? அவள்தான் என்று நான் நினைத்தேன். சரி ஐயா. 82 இப்பொழுது, உன்னுடைய பெயர் என்ன? [அந்தப் பெண், “ரூத்” என்று கூறுகிறாள்.—ஆசி.] ரூத், அது மிகவும் அழகாய் உள்ளது. ரூத் ஒரு நல்ல அழகான பெயர். எனக்கு அது பிடிக்கும், அது உண்மையாகவே நன்றாக எனக்குப் பிடிக்கும். இப்பொழுது, கடைப் பெயர் என்ன?…[யாரோ ஒருவர், “மையர்ஸ்” என்று கூறுகிறார்.] மையர்ஸ், சிறுமி ரூத் மையர்ஸ், அவள் இங்கிருக்கின்ற நம்முடைய பாடகிகளில் ஒருவளாய் இருக்கிறாள். அவர்கள் இரட்டைப்பிறவிகளா? முழுமையாய் அப்படி காணப்படுகிறது, அவர்கள் இரட்டைப்பிறவிகள் இல்லையா? 83 எங்கள் பரலோகப் பிதாவே, இதுவரையிலும் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கும், சேவைக்கும் எந்த விதத்திலும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்று தாயும் தகப்பனும் கூறுகிற இந்த சிறு பெண்ணை நாங்கள் உம்மிடத்தில் ஒப்புவிக்கிறோம். இன்றிரவு நாங்கள் சிறுமி ரூத்தின் மீது, சிறுமி ரூத் மையர்ஸ் மீது கரங்களை வைத்து, பாடுவதற்கு அவளுக்கு ஒரு திறமையை கொடுத்துள்ள வல்லமையான சர்வ வல்லமையுள்ள தேவன் அவளைத் தொடர்ந்து ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். அவள் பூமியின் மேல் இருக்கவிருக்கின்ற எல்லா நாட்களுக்குமான அவளுடைய ஜீவியம் உம்மண்டை பிரதிஷ்டை செய்யப்படுவதாக. நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறோம். 84 இந்த சிறு சகோதரியினுடைய பெயர் என்ன? லாய்ஸா? சரி, சிறுமி லாய்ஸ். என்னே! 85 எங்கள் பரலோகப் பிதாவே, வாலிப வயதில் சுவிசேஷ ஊழியத்தில் பாடும்படியான ஒரு திறமையோடு இருக்கக்கூடிய சிறுமி லாய்ஸின் மீது நாங்கள் கரங்களை வைக்கிறோம். கர்த்தாவே, இந்த பிள்ளைகளுடைய திறமைகளை ஆசீர்வதியும். இப்பொழுது அவர்களுடைய பெற்றோர்களால் இவர்களுடைய ஜீவியங்கள் உம்மிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கர்த்தாவே, விரைவில் அவர்கள் ஞானஸ்நானம் பெற வேண்டிய வயதை அடைந்து விடுவார்கள். அவர்கள் எது தவறு என்பதையும், மற்ற காரியங்களையும் உணரத் துவங்கும்போது, தவறானதை செய்யத் துவங்கும்போது, அப்பொழுது அவர்கள் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற வேண்டியதாய் இருக்கிறது. கர்த்தாவே, நேரமானது வருகிற வரைக்குமாய் நாங்கள் இவர்களை உம்மண்டை பிரதிஷ்டை செய்கிறோம். நீர் உம்முடைய மகிமைக்கென்றே இவர்களுடைய திறமைகளை உபயோகிப்பீராக. உம்முடைய சேவைக்கென்று மகிழ்ச்சியான ஜீவியங்களாய், நீண்ட காலம் ஜீவிக்கும்படி இவர்களுடைய ஜீவியங்களை உபயோகப்படுத்தும். நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த சிறு பெண்ணை உம்மண்டை பிரதிஷ்டை செய்கிறோம். ஆமென். 86 தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னோடிருந்து, நீ செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் உன்னை எப்பொழுதும் ஆசீர்வதிப்பாராக. சகோதரன் நெவில் அவ்வளவுதான். ஓ, அவர்கள் மிகவும் அழகாயுள்ளனர் என்று நான்—நான் கருதுகிறேன். நான்… 87 இப்பொழுது என்னுடைய பெண்பிள்ளைகள் பெரிதாகிக் கொண்டே போகிறார்கள், எனவே நான் ஒருவிதமாக…நான் வழக்கமாக அவர்களை முதுகில் ஏற்றி முழங்காலில் நடப்பேன். ஆனால் இப்பொழுது அவர்களால் அநேகமாக என்னையே முதுகில் ஏற்றி முழங்காலில் நடக்க முடியும், அவர்கள் மிகவும்—மிகவும் பெரிதாய் உள்ளனர்; விசேஷமாக பெக்கி மிகவும் பெரிய பெண்ணாய் உள்ளாள். 88 இப்பொழுது நாம் கர்த்தருடைய வார்த்தைக்காக மத்தேயு 15-ம்…இல்லை 5- அதிகாரத்திற்கு திருப்புவோமாக. நாம் அதிலிருந்து சரியாக ஒரு பகுதியை வாசிப்போம். பின்னர் கர்த்தருக்கு சித்தமானால், நான் ஒரு சிறு பேசும் பொருளை கிட்டத்தட்ட பதினைந்து, இருபது நிமிடங்களுக்கு அதிலிருந்து எடுக்கவுள்ளேன். அதன் பின்னர் நமக்கு இராப்போஜனமும், கால்களைக் கழுவுதலும், ஞானஸ்நான ஆராதனையும் இருக்கும். அது ஏறக்குறைய நமக்கு ஒன்பது மணி முப்பது நிமிடம் வரையில் நடைபெறும், பின்னர், இல்லை, கொஞ்சம் கழித்து முடிந்து விடும். நான் 5-ம் அதிகாரம் 12-ம் வசனத்திலிருந்து துவங்க விரும்புகிறேன். சந்தோஷப்பட்டு, களிகூறுங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப் போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வெறொன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது. 89 அங்குள்ள கடைசி வசனத்திலிருந்து நான் ஒரு பொருளை எடுக்க விரும்புகிறேன். அது 16வது வசனம்; உங்கள் வெளிச்சம் மனுஷர் முன்பாக இவ்விதமாய் பிரகாசிக்கக்கடவது. “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது”. 90 நீதிமானாகுதலைக் குறித்து இரண்டு வித்தியாசமான மனிதர்கள் இரண்டு இடங்களில் பேசியிருக்க நாம் வேத வார்த்தைகளில் கண்டறிகிறோம். அவர்களில் ஒருவன் பவுலாய் இருந்தான். மற்றொருவன் பேதுருவாய் இருந்தான். பரிசுத்த பவுலும், பரிசுத்த பேதுருவும்; பவுல் விசுவாசத்தினால் ஆபிரகாமை நீதிமானாக்கிக் கொண்டிருந்தான். பேதுருவோ கிரியைகளினால் ஆபிரகாமை நீதிமானாக்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கிரியைகளினால் அவன் நீதிமானாக்கப்பட்டான் என்று பேதுரு கூறினான். அவனுடைய விசுவாசத்தினால் அவன் நீதிமானாக்கப்பட்டான் என்று பவுல் கூறினான். இப்பொழுது, அவர்கள் ஒருவருக்கொருவர் மறுத்துப் பேசவில்லை. அவர்கள் அதை இரண்டு வித்தியாசமான அபிப்பிரயாங்களிலிருந்து நோக்கிக்கொண்டிருந்தனர். பவுல் ஆபிரகாமின் விசுவாசத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தான், அதைத்தான் தேவன் ஆபிரகாமிலே கண்டார். பேதுரு அவனுடைய விசுவாசத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தான். எனவே, “உன்னுடைய விசுவாசமில்லாமல் உன்னுடைய கிரியைகளை எனக்குக் காண்பி. என்னுடைய விசுவாசத்தினாலே என்னுடைய கிரியைகளை நான் உனக்கு காண்பிப்பேன்” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகையினால் இப்பொழுது என்ன பேசப்படுகிறதோ அதையும், தேவன் எதைக் கண்டாரோ அதையும் பவுல் பார்த்துக்கொண்டிருந்தான். மனிதன் எதைக் கண்டான் என்பதைக் குறித்து பேதுரு பேசிக்கொண்டிருந்தான். ஏனென்றால் ஒரு மனிதனிடத்தில் விசுவாசம் இருந்தால், அவன் அதைப்போன்று கிரியை செய்வான். அவனுடைய ஜீவியம் அதை மற்றவர்களுக்கு காட்டும். 91 எனவே இன்றிரவு நான், “நம்முடைய வெளிச்சத்தை பிரகாசிக்கச் செய்தல்” என்பதன் பேரில் பேச விரும்புகிறேன். 92 இப்பொழுது, இந்த சில நிமிடங்களுக்காக காணும்படியாகவோஅல்லது பேசுவதை கேட்கும்படியாகவோ நான் இங்கே வெறுமனே எழும்பி நிற்க விரும்பவில்லை. அது சரியாய் இருக்காது. ஆனால், ஒருக்கால் தேவன் எனக்கு உதவி செய்தால், ஒருவேளை நான் சில வார்த்தைகளை பேச, நமக்கு பக்தி விருத்தியாயிருக்கும் ஏதோ ஒன்றை பேசக்கூடும். அது நாம் எப்படி ஒரு மேலான காரியத்தை செய்யக்கூடும் என்றும், ஒரு மேலான ஒரு ஜீவியம் ஜீவிக்க முடியும் என்பதற்கு அது நம்மெல்லருக்குமே உதவியாயிருக்கும். அதற்காகத்தான் நாம் இங்கிருக்கிறோம் என்ற நிச்சயமுடையனாய் நான் இருக்கிறேன். அதாவது திருத்துதலை ஏற்றுக் கொள்ளவும், நம்மை மேலான கிறிஸ்துவர்களாக ஆக்க நாம் என்ன செய்ய வேண்டுமென்ற புரிந்து கொள்ளுதலை பெற்றுக் கொள்ளவுமே இங்கிருக்கிறோம். நான் என் ஜீவியத்தில் ஒரு காரியத்தை வாஞ்சிக்கிறவனாயிருந்தால், அது நான் ஒரு மேலான கிறிஸ்தவனாய் இருக்க வேண்டும் என்பதேயாகும். இங்கே இருக்கின்ற ஒவ்வொரு ஆத்துமாவின் இருதயக் கூக்குரலும் ஒரு மேலான கிறிஸ்தவனாய் இருக்க வேண்டும் என்பதாகவே இருக்கும் என்று நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். 93 சில நாட்களுக்கு முன்னர், நான் ஒரு வீதி வழியாய் மிகவும் வேகமாக கார் ஓட்டிக்கொண்டு, நான் வழக்கமாக செய்வது போன்று கவனித்துக்கொண்டே, நானே வாகனத்தை ஓட்டிச் சென்றேன். நீங்களாகவே வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லும்போது அது தனிமையான ஓட்டுதலாய் இருக்கும். நீங்கள் மார்க்க சம்பந்தமான இசையை கேட்கத்தக்கதாக குடும்ப நிகழ்ச்சி நிரல்கள் இருந்தாலொழிய வானொலியை திருப்ப முடியாது. ஏனென்றால் அதிலிருக்கிற காரியங்கள் யாவும் உங்களிடத்திலிருந்து ஆவியை எடுத்துப் போட்டுவிடும். 94 நான் சற்று வயதானவனாக ஆனபிறகு, நான் எங்கெல்லாம் போகிறேனோ, ஏன், நான் ஒரு சிறு குறிப்பு புத்தகத்தை உடன் கொண்டு செல்கிறேன். கர்த்தர் எனக்கு ஏதாவது காரியத்தை வெளிப்படுத்துகிற போது, நான் அப்பொழுதே அதை அப்படியே குறித்துக் கொள்கிறேன். காடுகளில் இருக்கும்பொழுது என் துப்பாக்கி உறையின் மேல் ஒரு தோட்டாவைக் கொண்டு எழுதி வைத்துக் கொள்வதுண்டு. அதைப் போன்ற காரியங்களினாலே எனக்கு அளிக்கப்படுகின்ற கருத்தினை பெற்றுக்கொள்ள வேண்டியதாய் உள்ளது. என்னுடைய துணியிலிருந்து ஒரு துண்டை எடுத்து அல்லது ஏதோ ஒன்றை எடுத்து, அதின்மேல் அதை எழுதிக்கொள்வேன். செய்தியை என் சிந்தையில் வைத்துக் கொள்ள அப்படி ஏதாவதொன்றை செய்வேன். 95 நான் இந்த வீதியின் வழியாய் வண்டியை ஓட்டிக்கொண்டு போகையிலே, நான் ஒரு மிகப் பெரிய அழகான விளம்பரப் பலகையை கவனித்தேன். வழக்கமாக, உங்களுக்குத் தெரியும், அதிகமான காரியங்களை இந்த விளம்பர பலகைகளின் மேல் ஒட்டி வைத்திருப்பார்கள். ஆனால் நான் அப்படிப்பட்ட காரியங்களை இந்த குறிப்பிட்ட விளம்பர பலகைகளின் மேல் காணவில்லை. வழக்கமாக அவைகள் அரை நிர்வாணமாக உடுத்தியுள்ள பெண்களின் படங்கள் அல்லது அதைப் போன்ற வேறு ஏதோ ஒன்று, ஒரு குறிப்பிட்ட முத்திரையுடைய சிகரெட்டுகள் அல்லது—அல்லது மதுபானம் அல்லது புளிப்பேறிய மது அல்லது ஏதோ ஒன்று போன்றவைகளின் விளம்பரங்கள் விளம்பரப் பலகைகளில் மகத்தானதாக பிரகாசித்துக்கொண்டிருக்கும். ஆனால் என்னுடைய ஆச்சரியத்திற்கு, என்னுடைய முதற்பார்வையிலே அது என் கவனத்தை வசீகரித்தது, காரணம் அது மற்ற ஏதோ காரியங்களோடு அது மாசுபட்டிருக்கவில்லை. அசுத்தமானவைகள் அதன் மேல் இல்லாதிருந்தது. நான் உற்றுப்பார்க்கும்படி திரும்பினேன். 96 அது ஒரு அழகான விளம்பர பலகையாயிருந்தது. சரியான ஒரு இடத்தில் பொருத்தப்பட்டிருந்தது, எங்கே வைக்க வேண்டுமோ அங்கே, நீங்கள் அந்த மூலையை திரும்பும்பொழுது உங்ளால் அந்த விளம்பர அடையாளத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது. என்னுடைய ஆச்சரியத்திற்கு “பசியா?” என்ற ஒரு வார்த்தை அதனூடாக குறுக்காக எழுதப்பட்டிருந்தது. வெறுமனே “பசியா?” அங்கே இருந்தெல்லாம் அவ்வளவுதான். பின்னர் நான் கவனித்தேன். அதன் கீழே சிறிய எழுத்தில், அந்த பலகையின் அடியில் “மூன்று மைல்களுக்கு முன்னால்” “பசியா? மூன்று மைல்களுக்கு முன்னால்” என்றிருந்தது. 97 நல்லது, அதைக் குறித்து நான் சிந்திக்கத் துவங்கினேன், ஜனங்கள் அதிக அளவில் இல்லை,…வழக்கமாக, அவர்களுக்கு முன்னால் ஒரு உணவு விடுதி இருந்தால், அவர்கள்—அவர்கள் மற்றவற்றை விட அதிகமாக விற்கவே முயற்சித்துக் கொண்டிருப்பார்கள்; படம், ஒரு பெரிய அளவு இறைச்சிக் கண்டனங்கள் முதலானவை வரையப்பட்டிருக்கும். நீங்கள் உள்ளே சென்று காணும்பொழுது, நீங்கள் வழக்கமாக விளமபரம் செய்யப்பட்டுள்ளது போன்றதான எதையுமே நீங்கள் கண்டறிய முடியாது, ஆனால் வெறுமனே ஒரு விளம்பரம் மட்டும் இருக்கும். ஆனால் இதுவோ ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருப்பது போன்று தென்பட்டது. 98 இன்றைக்கு நாம் ஜீவிக்கின்றதான இந்த நாளிலே விளம்பரத்திற்கு பலன் கிடைக்கிறது என்பதை நாம் அறிவோம். வியாபாரத்தில் பெரிய முன்னேற்றத்தை அடைந்துகொண்டிருக்கின்ற இந்த ஜனங்கள், விளம்பரங்களில் மகத்தான மனிதர்கள் என்பதை நாம் கண்டறிகிறோம். அவர்கள்—அவர்கள் அதை தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்துகிறார்கள். அவர்கள் அதனை தங்களால் முடிந்த எல்லா விளம்பர பலகைகளிலும், தங்களுடைய உற்பத்தி பொருட்களை விளம்பரம் செய்யும்படி பூசுகிறார்கள். “இந்த ஒன்றை புகையுங்கள்; ஒரு வண்டி நிறைய புகைத்தாலும் இருமல் இல்லை,” மற்றும் “சிந்திக்கும் மனிதனுடைய வடிகட்டி”, மற்றும் வெறொரு மனிதனின் மூளையில் அல்லது அதைப்போன்று ஏதோ காரியம்…அவர்களுடைய மதுபானத்தைக்கொண்டு, “நீண்ட நேரம் சுறுசுறுப்பாயிருங்கள்”. எல்லாமே அதைப் போன்ற காரியம் தான், அது ஒரு விளம்பரமாக இருக்கிறது. வெறுமனே விளம்பரத்திற்காக தங்களுடைய மிகுதியான வருமானவரியை அவர்கள் தள்ளுபடி செய்கிறார்கள். அது நிச்சயமாகவே பலனை அளிக்கிறது. 99 ஆக அதற்கு அது சரியான பலனளிக்கிறதென்றால், “அப்படியானால் கிறிஸ்தவ மார்க்கம் விளம்பரப்படுத்தப்பட்டால், அது ஏன் பலனடையாது?” என்று நான் சிந்திக்கத் துவங்குகிறேன். 100 நல்லது, அப்பொழுது நான், “விளம்பரம் என்றால் என்ன?” என்று நினைத்தேன். மற்றவர்களிடத்தில் இருக்கின்றதைக் காட்டிலும் ஏதோ காரியத்தை நீங்கள் பெற்றிருந்தால் அல்லது உலகத்தின் காரியங்களைப் போன்றே அவ்வளவு சாதாரணமாய் அது இருந்தால், அது ஒருபோதும் ஜனங்களின் கவனத்தை கவராது. இப்பொழுது, ஒரு மனிதன் ஒரு மோட்டார் வாகனத்தை தேடிக்கொண்டிருந்தால், அவன் அந்த விளம்பரத்தை பார்த்து கடந்து சென்றிருப்பான். ஆனால் அவன் பசியாயிருந்திருந்தால், அவன் அந்த அடையாளத்தை தேடிக்கொண்டிருந்திருப்பான். 101 எனவே, கிறிஸ்தவன் தேவனுடைய விளம்பரப்பலகையாயிருக்கிறான் என்று நான் நம்புகிறேன். நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய விளம்பர பலகையாயிருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். நாம் செய்வது போன்று, நாம் அதைக் குறித்து அவ்வளவாய் தொடர்ந்து சுமந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஜனங்கள் உங்களைப் போன்றிருக்க வேண்டும் என்ற பசியை ஏற்படுத்தும் ஒரு எளிமையான ஜீவியம் ஜீவியுங்கள். 102 இப்பொழுது, நான் இந்த விளம்பரப்பலகையில் இந்த குறிப்பிட்ட ஒன்றை கவனித்தேன். அது எதனையும், ஒன்றையுமே உரிமை கோரவில்லை, ஆனால் வெறுமனே கேள்வியே கேட்கப்பட்டிருந்தது. நீங்கள் “பசியாயிருந்தால்” என்றேயிருந்தது. அவர்கள் பசியாயிருந்தாலொழிய, நீங்கள் எவருக்குமே எதையும் சாப்பிட விற்பனை செய்ய முடியாது. அந்த விளம்பரமானது செய்கிற முதல் காரியம், அந்தப் பக்கமாக கடந்து போகிற தனிப்பட்ட நபர் அதை காண வேண்டும் என்பதே. 103 இப்பொழுது, உலகமானது எப்பொழுதும் கிறிஸ்துவை காண்பதற்கு உள்ள ஒரே வழி, அவனோ, அவர்களோ, அதை உன்னிலும் என்னிலும் காண்பதேயாகும். அந்த ஒரே வழியில்தான் அவர்கள் எப்பொழுதும் கிறிஸ்துவை காண்பார்கள். நாம் கிறிஸ்துவைக் கண்டடைந்த பின்னர் நாம் அனுபவிக்கிறதான சூரிய அஸ்தமனத்திற்கும், பறவைகளின் கூவுதலுக்கும், இலைகளுக்கும், புற்களுக்கும், பூக்களுக்கும் மற்றும் இசை, செய்தி முதலானவைகளுக்கு அவர்களுடைய மனசாட்சி மறுத்துப் போயுள்ளது. ஆனால், நாம் கிறிஸ்துவை வெளிப்படுத்திக் காட்டும் ஒரு ஸ்தானத்திற்கு நாம் வரும் வரையிலுமே!. 104 இப்பொழுது, அதை நினைவில் வையுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும், இன்றிரவு முதற்கொண்டு, நீங்கள் தேவனுடைய விளம்பரப் பலகைகளாய் இருக்கின்றீர்கள் என்பது நினைவிருக்கட்டும். நீங்கள்—நீங்கள் தேவனுடைய விளம்பர முகவர்களாய் இருக்கிறீர்கள். இப்பொழுது, கிறிஸ்து என்னவாக இருக்கின்றார் என்று காண உலகம் உங்களை நோக்கிப் பார்க்கும். எனவே நாம் அதிகப்படியான காரியத்தை அதன் மேல் அங்கே பூசவேண்டாம், அது நம்மிடத்தில் உண்மையாகவே இல்லாத காரியங்களைக் குறித்தே சாட்சி பகரும், நாம் முதலில் அப்படி இருப்போமாக. அதன் பின்னர் நாம் அவ்விதம் இருக்கும்பொழுது, அப்பொழுது உலகமானது கிறிஸ்துவை உங்களிலும் என்னிலும் காணும். 105 முதலில் எந்த விளம்பரமாயிருந்தாலும், அதை தனியொரு நபர் காண வேண்டும். 106 பின்னர், அடுத்த காரியம், அவர்களுக்கு அது தேவையாயிருக்க வேண்டும். இப்பொழுது, அவர்கள் அதைக் கண்டு, அது தேவையில்லை என்றால், அப்பொழுது அது வித்தியாசமானது. ஆனால் நீங்கள் ஒரு வீணான விளம்பரத்தை வெளியில் போட்டிருக்கவில்லை. 107 ஆனால் முதலில் அவர்கள் அதைக் காணவேண்டுமென்றால், அப்பொழுது நாம் அதை அவர்களுக்கு மிகவும் கவர்ச்சியுள்ளதாக்க வேண்டும். ஓ, இரட்சிப்பின் வசீகரத்தன்மையானது ஒரு நபருக்கும் என்ன செய்கிறது என்பதை நாம் காண்கிறோம் என்று நான் நம்புகிறேன். நாம் உலகத்தை கிறிஸ்துவுக்கு வசீரகப்படுத்தியதாக வேண்டும், சுவிசேஷம் ஒரு வசீகரத்தன்மையை உடையதாயிருக்கிறது. தேவனுக்காக பசியாயுள்ளவர்கள் அதனை பெற்றுக்கொள்கிறதாய் அது உள்ளது. பசியாயும், தாகமாயும் இருந்து கொண்டிருக்கிறவர்களை மட்டுமே அது கவர்ச்சிக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்காகவே நாம் வெளியே போகிறோம். “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்”. 108 ஆனால் அநேகர் பிதாவினால் இழுத்துக் கொள்ளப்பட்டு, தேவனைக் கண்டறியும்படி பசியாயும், தாகமாயும் இருந்துகொண்டு, அவரை எங்கே கண்டடைய வேண்டும் என்பதை அறியாமலிருக்கின்றனர்; ஏனென்றால் விளம்பர பலகைகளாய் இருக்கவேண்டியவர்கள், உலகத்தின் காரியங்களால் அவ்வளவாய் கறைப்படுத்தப்பட்டிருக்கும் வரை, அவர்கள் அவரிடத்தில் வருவதற்கு முன்னர் அவர்களிடத்தில் இருந்ததைக் காட்டிலும் அவர்கள் அதிகமாக எங்கே பெற்றார்கள் என்பதை அவர்களால் காணமுடியாது. அவர்கள் உலகத்தைப் போன்று ஜீவிக்கிறார்கள். அவர்கள் உலகத்தைப் போன்று பேசுகிறார்கள். உலகம் பாடுகின்ற அதே பாடல்களை அவர்கள் பாடுகிறார்கள். அவர்கள் உலகத்தைப் பொன்றே உடுத்துகின்றார்கள், விசேஷமாக பெண்பாலர்களை நான் குறிப்பிடுகிறேன். அவர்கள் உலகத்தைப் போன்று நடந்து கொள்கிறார்கள். அவர்கள் உலகப்பிரகாரமான ஸ்தலங்களுக்கு செல்கிறார்கள். அவர்கள் உலகப்பிரகாரமான பொழுதுபோக்குகளில் பங்கு கொள்கிறார்கள் 109 அன்றொருநாள், யாரோ ஒருவர், ஒரு குறிப்பிட்ட ஊழியக்காரனைக் குறித்து என்னிடம் கூறினார். நான் அந்த மனிதனை நேசிக்கிறேன். அவர் ஒரு மகத்தான மனிதன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் “ஆனால் நீங்கள் உருளும் பரிசுத்தர் என்று அவர் கூறினார்” என்றார், என்னிடத்தில் நான் ஒரு உருளும் பரிசுத்தர் என்றும் கூறினார். 110 நான், “நல்லது, ஆனால் நான்—நான்—நான் அவ்வாறு இருப்பதாக நான் நினைக்கவில்லை” என்றேன். நான், “நான்—நான் பரிசுத்தமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். கர்த்தர் எப்போதாவது என்னிடத்தில் உருளும்டி கூறினால், நான் உருளுவேன் என்று யூகிக்கிறேன். ஆனால் நான்—நான் பரிசுத்தமாயிருக்கவே விரும்புகிறேன், எப்படியிருந்தாலும் ஒரு பரிசுத்தமான ஜீவியம் ஜீவித்தல் என்றால் தேவனுக்கு முன்பாக தூய்மையாய் இருத்தல் என்றே பொருள்” என்றேன். 111 எனவே அவர், “நீ வெளியே ஓடுகின்றாய், நல்லது, கடல் கடந்து போகின்றாய், அந்தவிதமாக சுற்றிக்கொண்டு வந்து உன்னைத்தானே ஒரு ஊழியனாய் ஆக்கிக்கொண்டீர். எந்த சபையும் உம்மை அனுப்பவில்லையாம், நீரே உம்மை ஒரு ஊழியனாக ஆக்கிக் கொண்டீராம்” என்றார். 112 நான், “நல்லது, நான் தானாக ஒரு ஊழியனாய் என்னை ஆக்கிக் கொண்டவனானால் அது ஒருபோதும் உலகத்தின் கவனத்தை கவர்ச்சிக்காது, ஏனென்றால் அவர்கள் அதை எதிர்நோக்கிக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் கிறிஸ்துவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்” என்றேன். 113 அந்தக் காரியங்களையே அந்த மனிதர்களும், ஜனங்களும் நினைக்கிறார்கள் என்று நாம் கண்டறிந்தோம். இரண்டு வித்தியாசமான வகுப்பினர் இருக்கிறார்கள். தேவனுக்கு இரண்டு வித்தியாசமான வகுப்பினர் உண்டு. 114 வீட்டிலே தரித்திருக்கவும், வியாதியுள்ளவர்களுக்கு மணஞ் செய்து கொடுக்கவும், மரித்தோரை அடக்கம் பண்ணவும், குழந்தைகளை முத்தமிடவும், அவர்களுடைய வாலிபர்களுக்கு மணம் செய்து வைத்தல் போன்றவைகளுக்கு தேவன் உபயோகிக்கும் மனிதர்கள் இருக்கின்றார்கள். அந்த மனிதர்களில் அநேகருக்கு பட்டயத்தை கொண்டு செல்வது என்னவென்றும், இருக்கைப் பட்டயத்தோடு முன்வரிசையில் அங்கே வெளியே செல்வதையும் அறியாதிருக்கிறார்கள். ஒரு யுத்தம் என்றால் என்ன என்றும், எதிராளிக்கு எதிராக போரிடுவது என்னவென்றும் அவர்கள் அறியாதிருக்கிறார்கள். அவர்கள் அங்கே வெளியே செல்கிறார்கள். அவர்கள் சமர்த்தரான மனிதர்களாயும், வேதசாஸ்திரிகளாயும், மகத்தான மனிதர்களாயும், அவர்களோடு யார் நிற்கக்கூடும் என்னும் விதத்தில், அவ்வளவாய் தொடக்கூடிய ஒரு பிரசங்கத்தை செய்யக்கூடியவர்களாயும், அவ்வளவு அழகான சொல்வன்மையுடன் பேசக்கூடியவர்களாயும், வெப்ஸ்டர் அகராதியிலும் (Webster) அவர்கள் என்ன கூறிக் கொண்டிருந்தனர் என்பதற்கு அர்த்தத்தை புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். அவர்கள் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள். ஆனால் ஒரு சபை வீட்டை வெறுமையாய் தேடிக் கொண்டிருக்கும் ஒரு புத்தி கூர்மையான கூட்டத்தாரிடத்தில் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்பொழுது அது சரியாயிருக்கிறது. 115 ஆனால் நீங்கள் அங்கே போர்முனைக்கு செல்லும்போது, அங்கே அந்த மனிதர்கள் அதைக் காட்டிலும் அதிகம் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் வெளிப்படுத்தலில் சர்வவல்லமையுள்ள தேவனின் வல்லமையை காணத்தான் வேண்டும். இல்லையென்றால் நீங்கள் அதை ஒருபோதும் அவர்களுக்கு விற்கமுடியாது. அவர்கள் கிறிஸ்துவை அவருடைய உயிர்த்தெழுதலில் காணத்தான் வேண்டும். 116 இருந்தபோதிலும், இப்பொழுது இந்த மனிதர்கள் இருகை பட்டயத்தைப் பிடித்து, அங்கே எதிராளியுடன் அணுக்கமாக எப்படி சண்டையிட வேண்டும் என்பதையே அறியாமலிருக்கிறார்கள். அங்கே பிசாசுகளும், மந்திரக்காரர்களும், மற்றெல்லா காரியமும் அங்கே நின்று, எல்லாக் காரியங்களிலும் உங்களுக்கு சவாலிடுகின்றன. அங்கே வேதத்தை வாசிக்கின்ற ஜனங்கள் “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருப்பாரானால், அந்த நாட்களில் அங்கே செய்தது பொன்றே பரிசுத்த ஆவியானவர் செய்ய நான் காணட்டும்” என்கிறார்கள். புரிகின்றதா? அப்பொழுது அதை செய்ய நீங்கள் ஒரு பாண்டித்தியத்தை எடுக்க முடியாது. 117 அதை உண்டுபண்ணுவதற்கு அது இயேசு கிறிஸ்துவினுடைய வல்லமையையும், உயிர்த்தெழுதலையும் எடுக்கிறது. ஆம், இப்பொழுது அதைத்தான் பசியாயுள்ள பூர்வீக ஜனங்கள் எதிர்நோக்குகிறார்கள். அவர்கள் அதை காணத்தான் வேண்டும். அவர்களுக்கு அது இருந்தாக வேண்டும். 118 இந்த தேசமும் அதே காரியத்தைத்தான் பெற்றிருக்கிறது. இன்றிரவு அந்தக் காரணத்தினால்தான், நாம் இந்த அணுகுண்டு யுத்தத்தைக் குறித்ததான இந்த் எச்சரிப்புகளெல்லாம் பெற்றிருக்கிறோம். ஏனென்றால் தேசங்கள் அதை கண்டிருக்கிறது. இந்த தேசம் அதை வேண்டாம் என்கிறது. அந்த காரணத்தினால் தான் அந்த தெய்வீக நியாயத்தீர்ப்பு அவர்கள்மேல் இருக்கிறது. ஏனென்றால் நாம் தராசிலே நிறுக்கப்பட்டு இருக்கிறோம். 119 நம்முடைய ஜனாதிபதியான திரு. கென்னடி, டாம், அவருடைய பெயர் கென்னடி என்று நான் நினைக்கிறேன், அதாவது இந்த பிரிவினை யுத்தத்திற்காகவே அநேக அதிகாரிகளை அனுப்பினார் என்று நான் நம்புகிறேன். இந்தப் பிரிவினை யுத்தத்தை நிறுத்துவதற்கு தென்பகுதியில் நானூறுக்கும் மேற்பட்டவர்களை அவர் அனுப்பினார். அவர் தன்னுடைய முழு ஓட்டத்தில் அதை முடித்தபோது, அதற்கு மேல் அவர்கள் யாரையுமே அனுப்பவில்லை. அவர் சரியாக அறுநூற்று அறுபத்தாறு பேரை உடையவராயிருந்தார். இது டைம்ஸ் பத்திரிக்கையில் வந்திருந்தது. ஓ, ஜனங்கள் மட்டும் ஆவிக்குரியவர்களாயிருந்தால், அவர்கள் எழுந்து, “அறுநூற்று அறுபத்தாறு” என்னவென்பதைக் கண்டிருக்க முடியும். சரியாக அதைத்தான் அவர்கள் உடையவர்களாயிருந்தனர். அது இந்த டைம்ஸ் பத்திரிக்கையில் உள்ளது. 120 இப்பொழுது ஜனங்களுக்கு தேவன் தேவையாயிருக்க துவங்கும் வரையிலும் ஜனங்களுக்கு தாகமுண்டாகத் துவங்கும்வரை என்பதை நாம் கண்டறிந்தோம். இயேசு, “நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்” என்றார். இப்பொழுது நீங்கள் அதற்காக பசியாயும், தாகமாயும் இருக்கத்தான் வேண்டும்.நாம் கிறிஸ்துவினுடைய விளம்பர பலகையாயிருக்கிறோம். 121 கிறிஸ்து நம்முடைய ஆதரவாளராயிருக்கிறார், ஏனென்றால் இந்த ஊக்க ஆதரவு கிறிஸ்துவினால் உண்டானதாய் இருக்கிறது. அவரை பொறுப்பேற்றுக்கொள்ள அவர் நமக்கு நம்முடைய ஜீவனை அவர் கொடுக்கிறார். இப்பொழுது, நீங்கள் யாருக்காவது பொறுப்பேற்றிருந்தால், நீங்கள் எந்த விதமான ஒரு நபராய் இருப்பீர்கள்? நாம் கிறிஸ்துவினால் பொறுப்பேற்கப்பட்டவர்களானால் எந்தவிதமான ஒரு நபராய் நாம் இருக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்? அவர் நமக்கு இரட்சிப்பை அளிக்கிறார். அவர் நம்முடைய சுகத்தை நமக்கு தருகிறார். அவர் நம்முடைய ஆரோக்கியத்தையும், பெலனையும் நமக்குத் தருகிறார். அவர் நம்முடைய ஆகாரத்தை நமக்கு கொடுக்கிறார். அவர் நம்முடைய வீடுகளை நமக்கு கொடுக்கிறார். அப்படியானால் நாம் கிறிஸ்துவினால் பொறுப்பேற்கப்பட்டவர்களாய் இருக்கிறோம். பரிசுத்த ஆவினால் நிரப்பப்பட்ட பெந்தெகோஸ்தே ஜனங்கள் இயேசு கிறிஸ்துவின் பொறுப்பேற்பாளர்களாய் இருக்கின்றனர். அவர்கள் இயேசு கிறிஸ்துவினால் பொறுப்பேற்கப்பட்டு ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்படியாகவே பரிசுத்த ஆவியானது கொடுக்கப்பட்டுள்ளது. 122 இன்றைக்கு நாம் என்னவாக இருக்க வேண்டும்? இன்றைக்கு சபை எங்கே இருக்க வேண்டும்? முழு உலகமும் நம்மைப்போன்று இருக்க வேண்டும் என்ற வாஞ்சைக்கு காரணமாய், அப்படிப்பட்டதொரு நிலையில் நாம் அவ்வண்ணமே இருக்க வேண்டும். ஏனென்றால் புருஷர்கள், அங்கு வீதியில் சென்று, “அங்கே ஒரு மனிதன் இருக்கிறான், அவனுடைய மத உபதேசங்களில் ஒருக்கால் நான் அவனோடு ஒத்துப் போகாதிருக்கலாம், ஆனால் நான் உங்களுக்கு ஒரு காரியத்தை சொல்லுகிறேன், அவன் ஒரு அசலான கிறிஸ்தவன்” என்று கூறுகிறார்கள். “அவள் பண்டைய நாகரீகம் கொண்டவளைப் போல காணப்படலாம். ஒருக்கால் நீங்கள் காண்கிற மற்ற ஸ்திரீகளைப் போன்று அவள் இல்லாதிருக்கலாம். ஆனால் இந்த பட்டணத்தில் ஒரு கிறிஸ்தவள் இருக்கிறாள், அங்கே ஒருவள் இருக்கிறாள் என்றால் அதோ போகிறாளே அவள்தான்” என கூற, வீதியில் போகின்ற ஸ்திரீகளாய் இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் இயேசு கிறிஸ்துவினால் பொறுப்பேற்கப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஆமென். 123 ஓ, நாம் அவருடைய விளம்பர பலகைகளாய், அவரால் பொறுப்பேகப்பட்டவர்களாய் இருக்கின்றோமென்றால், நாம் எந்தவிதமான நபராய் இருக்க வேண்டும்? அப்பொழுது நம்முடைய ஜீவனை நாம் அங்கே கிறிஸ்துவுக்குள்ளாக பெற்றுக் கொள்கிறோம். நாம் நம்முடைய பெலனை கிறிஸ்துவினிடத்திலிருந்து பெற்றுக் கொள்கிறோம். நம்மிடத்தில் உள்ளவையெல்லாம் கிறிஸ்துவினிடத்திலிருந்தே நமக்கு வருகிறது. அவரே நம்முடைய ஆதரவாளராயிருக்கிறார். ஓ, நான் அதற்காக மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். 124 ஆகையினால்தான் அவரைப் போன்று இருக்க வேண்டும். நாம் என்ன செய்கிறோம் என்றும், நாம் என்ன கூறுகிறோம் என்றும், நம்முடைய அன்றாட ஜீவியத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பதிலும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். ஏனென்றால் நாம் கிறிஸ்துவினால் பொறுப்பேற்கப்பட்டிருக்கிறோம். பொறுப்பேற்கப்பட்டிருந்தால் நாம் எப்படி நடக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். பொறுப்பேற்கப்பட்டவர்களாயிருந்தால் நாம் என்ன சொல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம்? நமக்கு எதிராக யாராவது பொல்லாங்காய்ப் பேசினால், நாம் கிறிஸ்துவினால் பொறுப்பேற்கப்பட்டவர்களாய் இருந்தால் நாம் என்ன சொல்ல வேண்டும்? நாம் கிறிஸ்துவைப் போல் இருக்க வேண்டும். அது சரிதானே? [சபையார், “ஆமென்” என்று கூறுகிறார்கள்.—ஆசி.] 125 இப்பொழுது ஒரே ஒரு காரியம் தான் உண்டு…நாம் இன்னொரு காரியத்தையும் செய்ய வேண்டும், ஒரே காரியத்தை மட்டுமல்ல, ஆனால் ஊழியக்காரர்களாகிய நாம் இன்னொரு காரியத்தையும் செய்ய வேண்டும். நாம் பசியாயுள்ளவர்களுக்கு கவர்ச்சியாய் இருக்கக்கூடிய ஒரு சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும். 126 இப்பொழுது, நாம் ஒரு சமுதாய சுவிசேஷத்தை பிரசங்கிப்போமானால் “நல்லது, நீங்கள் எங்கள் ஸ்தாபனத்தில் வந்து சேர்ந்து கொள்ள வேண்டும். கடந்த வருடம் எங்களுடைய ஸ்தாபனத்தில் நாங்கள் நானூறு பேருக்கும் அதிகமானவர்களை உடையவர்களாயிருந்தோம்” என்று கூறுகிறோம். அதுவல்ல அது. “நீங்கள் என்னுடைய சபைக்கு வந்தால் அல்லது என்னுடைய சபையின் ஒரு அங்கத்தினரால் உங்களுக்கு வயதாகும்போது…உங்களை கவனித்துக் கொள்ளும்படியாக நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் ஒரு உண்மையுள்ள அங்கத்தினராக இருங்கள். அது ஒரு காப்பீடு பத்திரம் போன்றே உள்ளது. உங்களுக்கு வயதாகும்போது நீங்கள் கவனித்துக் கொள்ளப்படுவீர்கள். நாங்கள் அதைப் பார்த்துக் கொள்வோம்” அது இன்னமும் கவர்ச்சிக்கின்றதாயில்லை. 127 பசியாயுள்ள ஒரு உலகத்திற்கு கவர்ச்சியான சுவிசேஷத்தை பிரசங்கிப்பதே நாம் செய்ய விரும்புகிற காரியமாக உள்ளது. 128 இப்பொழுது இங்கே சரியாக நம்மை சுற்றியிருக்கின்ற, ஜீவிக்கின்றதொரு சூழ்நிலையில் கிறிஸ்துவை எழுப்புகின்ற ஒரு சுவிசேஷத்தை நீங்கள் பிரசங்கித்தாலொழிய, அவர்கள் எங்கேயிருந்து வந்தார்கள் என்றும், அவர்கள் யாராயிருக்கிறார்கள் என்றும், அவர்கள் எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் காணமுடியாத ஒரு பசியான உலகத்தை நீங்கள் எப்படி கவர்ச்சியூட்ட முடியும்? நாம் அதை செய்ய முடியாது. ஏதும் வழியே கிடையாது. நாம், நாம் சேர்ந்து கொள்ள முடியும். நாம் பற்றுதல் கொண்ட கழக உறுப்பினரோடு அல்லது விநோதமான நபர்களோடு அல்லது மற்றும் ஏதோ விடுதியோடு சேர்ந்து கொள்ள முடியும். விடுதியில் சேர்ந்து கொள்வது என்பது சரியாயிருக்கும். 129 ஆனால் பசியாயிருக்கின்ற ஜனங்களுக்கு கவர்ச்சியாயிருக்கக் கூடிய ஒரு சுவிசேஷத்தை நாம் பிரசங்கிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அது நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்களாய் இருக்கின்றவர்களை பிடித்துக் கொள்ளும். “நீதியின்மேல் பசிதாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்”. இப்பொழுது அவர்கள் எப்படி இருப்பார்கள்? “நீதிமான்கள் திருப்தியடைவார்கள்”. எதினால் திருப்தியடைவார்கள்? பரிசுத்த ஆவியினால். 130 வேதம் “ஸ்தேவான் நிறைந்திருந்தான்…” என்று கூறியுள்ளது. எதினால் நிறைந்திருந்தான்? வல்லமையினால் நிறைவு. விசுவாசத்தின் நிறைவு, அன்பின் நிறைவு. “பரிசுத்த ஆவியின் நிறைவு.” அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்த காரணத்தினால், அது அவனை அந்த விதமானவனாக ஆக்கியது. அவன் கிறிஸ்துவுக்கு ஒரு உண்மையான விளம்பர பலகையாய் இருந்தான். 131 செனகரீம் ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக அந்தக் காலையில் அவன் நின்றபோது அவர்கள் அவனை குற்றம் சாட்டினர். அவர்கள் “இந்த மனிதன்” அவன் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தான் என்பதை கூறினார்கள். அவனோ தனிமையாய் நின்றான், அந்த மகத்தான செனகரீப் ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக அவன் மட்டும் தனியாய் நின்றான். ஒருக்கால் இரண்டு அல்லது மூவாயிரம் யூதர்கள் அல்லது ஐந்தாயிரம் யூதர்கள் ஒரு சுட்டிக்காட்டும் விரலோடு அங்கே நின்று கொண்டிருந்திருக்கலாம். 132 அவன் அங்கே நடந்து சென்றபோது, “அவனுடைய முகம் தேவதூதன் போல் இருந்தது” என்று வேதம் கூறியுள்ளது. அது அவனுடைய முகத்திலிருந்து ஒரு வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருந்தது என்பதை குறிக்கவில்லை. ஒரு தூதன், அவன் எதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை அறிந்திருக்கிற ஒரு செய்தியாளனாய் இருப்பான். ஸ்தேவான் மரணத்திற்கு பயப்படாமல் அங்கே வெளியே நடந்து சென்றான். அவன் மரணத்தைக் குறித்து பயப்படவில்லை. அவன் ஒன்றையும் குறித்து பயப்படாமல் இருந்தான், ஏனென்றால் அவன் எதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். 133 “நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயத்துமிருக்கிறேன்” என பவுல் கூறினது போன்றேயுள்ளது. 134 ஆனால் ஸ்தேவான் அங்கே செனகரீம் ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக, அவனுடைய இரத்தத்திற்காக ஊளையிட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்ட ஓநாய்களின் மத்தியில் ஒரு ஆட்டைப் போன்று நடந்து சென்றான். அவர்கள் அவனைக் குற்றப்படுத்தி, குற்றப்படுத்தும் விரலை அவனை நோக்கி நீட்டினார்கள். அவன் என்ன செய்தான்? அவன் “மனிதர்களே, சகோதர்களே, மகிமையின் தேவன் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது, அவன் அழைக்கப்படுவதற்கு முன்பாக தரிசனமானார்” என்று கூறினான். அப்படியே தொடர்ந்து பேசி, அதை சான்றாக எடுத்துக் கூறி, ஆபிரகாமின் வரலாறு முழுவதையும், எப்படியாய் அவன் மூலமாக புறஜாதியார் கொண்டு வரப்படுவார்கள் என்பதையும் கூறினான். அவன் பேசிக்கொண்டே ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபோது…அவனை நோக்கிப் பார்த்தபோது, பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தான். அவர்கள் தங்களுடைய கரங்களினால் அவனை அடிக்கும் வரையிலும் அவர்கள் காத்திருக்க, காத்திருக்க முடியவில்லை. அவன், “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்தஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்” என்றான். அவன் தேவனுடைய விளம்பர பலகையாயிருந்தான். 135 அவர்கள் அவனை கல்லெறிந்து கொன்றபோது, அவனை நகரத்துக்கு புறம்பே தள்ளி, அவனை அடித்து, கல்லெறிந்து கொன்றார்கள். அவன் மரித்துக்கொண்டிருந்தபோது, அவன் தன்னுடைய தலையை பரலோகத்திற்கு நேராக உயர்த்தி, அவனை கல்லெறிந்து கொண்டிருந்தவர்களுக்காக மன்னிப்பு கேட்டான், இயேசுவானவர் சிலுவையில் செய்ததுபோன்றே. 136 பின்னர், தேவன் அவருடைய சிறிய விளம்பர பலகை கீழே கொண்டு போகப்படுகிறதைக் கண்டார். ஸ்தேவான் வானத்தை அண்ணார்ந்து பார்த்து, “அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்” என்றான். அவன் தேவனுடைய கரங்களில் நித்திரையடைந்தான். பசியாயுள்ள ஒரு உலகத்திற்கு அவன் ஒரு விளம்பர பலகையாயிருந்தான். 137 நீங்கள், “எத்தனை பேர் அங்கே இருந்தனர்? ஒருக்கால் ஐந்தாயிரம் இருந்திருக்கலாம் என்று நீர் கூறினீர். அவர்களில் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டனர்?” என்கிறீர்கள். 138 அங்கே ஒருவன் இருந்தான். அப்பொழுது அவன் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு ஏற்றுக் கொண்டான். எங்குமே உங்களுடைய பாதிப்பு மரிக்கிறதில்லை. அல்லேலூயா! ஒருவன் அங்கியை வைத்துக்கொண்டிருந்தபோது, சவுல் என்ற வாலிப பரிசேயன் அங்கே நின்று கொண்டிருந்தான். அவன் ஆலோசிக்கப்பட்டு, தேவனுடைய மரணத்திற்கு சாட்சியாயிருந்தான். ஆனால் அந்த சிறிய நபரில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையின் விளம்பரத்தை அவன் கண்டபோது, அது அவனை விட்டு நீங்கிபோகவே இல்லை. அதே மனிதன், பவுல் அந்தக் காலை அங்கு அன்று நின்றுகொண்டு, இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு விளம்பர பலகையாயிருக்கும்படி தன்னுடைய ஜீவனைக் கொடுக்க சித்தமாயிருந்த ஒரு மனிதனின் காரணமாக ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை கிறிஸ்துவினிடத்திற்கு வழிநடத்தினான். 139 இன்றைக்கு நாம் என்ன செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம்? நாம் பெரிய கூட்ட ஜனங்களை உடையவர்களாய் இல்லை என்பதை குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. நாம் பத்தாயிரம் பேர்களுக்கு பிரசங்கிக்க வேண்டியதில்லை. நாம் பிரசங்கிக்கவுங் கூட வேண்டியதில்லை. நாம் தேவனுடைய விளம்பர பலகையாக இருக்க முடியும். உங்களுடைய ஜீவியம் யாரோ ஒரு வாலிப மனிதனை சுவிசேஷத்தில் துவங்கும்படியாய் இருக்காது என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்? சில வயதான மனிதர்களாகிய நீங்கள், பாருங்கள், வயதான ஸ்திரீகள், அங்கே யாரோ ஒரு வாலிபமான மனிதனை வெளியே ஊழியத்தில் துவக்கி, பத்தாயிரம் ஆத்துமாக்களை கிறிஸ்துவுக்கு ஆதாயப்படுத்துவீர்கள், ஏனென்றால் அவன் உங்களில் கிறிஸ்துவை கண்டான். எளிமையான சுவிசேஷத்தின் வல்லமையில் நீங்கள் அவனுக்கு கிறிஸ்துவை அளித்தீர்கள். ஆம். 140 நமக்கு கிறிஸ்து தேவை என்று நான் நினைக்கிறேன். ஆம் ஐயா, அவர் ஒவ்வொருவரிலும் பிரதிபலிக்கிறதே நாம் கிறிஸ்துவைக் காணும் ஒரே வழியாய் இருக்கிறது. நான் கிறிஸ்துவை உங்களில் காண்கிறேன். நீங்கள் அவரை என்னில் காண்கிறீர்கள். அந்த விதமாகத்தான் நாம் கிறிஸ்துவை கவனிக்கிறோம். நான் கூட்டத்திற்கு வருகிறேன். நான் பிரசங்கிக்க துவங்குகிறேன். நான் ஜனங்களை கவனிக்கிறேன். வெறுமனே ஒரு சில நிமிடங்களில் அவர்களுக்கு ஆர்வம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை நீங்கள் காணமுடியும். நீங்கள் உங்களுடைய கூட்டத்தாரை நோக்கிப் பாருங்கள். நீங்கள் அவர்களை சலிப்படைய செய்து கொண்டிருக்கிறீர்களா அல்லது சலிப்படையச் செய்யவில்லையா என்பதை நீங்கள் கூற முடியும். புரிகின்றதா? நீங்கள் அறிந்து கொள்கிற முதலாவது காரியம், அவர்கள் அங்கே அமர்ந்துகொண்டு, எதிர்பார்த்தலின் கீழ் ஒவ்வொரு வார்த்தையையும் பற்றிக் கொண்டிருக்கிறதை நீங்கள் காண்கிறீர்கள். புரிகின்றதா? நான் அந்த நபரிலே கிறிஸ்து பிரதிபலிக்கப்படுகிறதை காண்கிறேன், ஏனென்றால் அவன் தேவனுக்காக பசியாயும், தாகமாயும் இருந்துகொண்டு இருக்கிறான். 141 அப்பொழுது நான், சுவிசேஷத்தை பிரசங்கிக்கையில், கிறிஸ்து என்னில் பிரதிபலிக்கிறதை அவன் காண்கிறான். நான் கிறிஸ்து அவனில் பிரதிபலிக்கிறதை காண்கிறேன். அதென்னவென்றால் அப்போது கிறிஸ்து நமது மத்தியில் இருக்கிறார் என்பதாகும். ஆமென். “பசியாயும், தாகமாயும் இருத்தல்”. அவர்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நான் கூட்டத்தாரை கவனிக்கிறேன். ஏதாவது மற்ற காரியத்தை கூறுங்கள், அது அவர்கள் மேல் என்ன பாதிப்பை உண்டாக்குகிறது என்பதை கவனியுங்கள். அவர்கள் முகம் பிரகாசித்து, சந்தோஷத்தால் நிறைந்திருக்கிறதை கவனியுங்கள். அப்பொழுது அவர்கள் ஏதோ காரியத்தை பெற்றுக் கொள்ள ஆயத்தமாய் இருக்கிறார்கள். அது கிறிஸ்துவாயிருக்கிறது. அந்த நபரிலே கிறிஸ்து பிரதிபலிக்கிறதை நான் காண்கிறேன். ஏனென்றால் சுவிசேஷம், எளிமையான கிறிஸ்துவின் சுவிசேஷம் அந்த இருதயத்தில் ஒரு பற்றுதலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, ஏனென்றால் அவர்கள் பசியாயும், தாகமாயும் இருந்து கொண்டிருக்கிறார்கள். 142 நான் இங்கே ஒரு விளம்பர பலகையை, ஒரு விளம்பரத்தை காட்டியிருக்கிறேன். என்ன விதமான ஒரு விளம்பரம்? ஏதோ வேத சாஸ்திரத்திற்கு அல்ல, ஏதோ மனிதனாலாக்கப்பட்ட கோட்பாட்டிற்கல்ல, ஆனால் இன்றைக்கும் மாறாமல் ஜீவிக்கின்ற ஒரு கிறிஸ்துவுக்கு, ஒரு வல்லமைக்காக, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதற்காக காண்பித்தேன். ஆமென். சரி. அந்த தேவனுடைய வல்லமை அசைகிறதையும், கட்டிடம் முழுவதும் அதை கவனிக்கிறதையும், அது ஜனங்களை தெரிந்தெடுக்கிறதை காணவும், அவர்களுடைய இருதயங்களை வகையறுக்கின்றதையும், வியாதியஸ்தரை சுகப்படுத்துகிறதையும், அவர்களுடைய இருதயத்தின் அந்தரங்களை வெளிப்படுத்துகின்றதையும், செவிடான காதுகளின் அடைப்பு எடுத்து விடப்படுகிறதையும், குருடரை காணும்படி செய்கிறதையும் அவர்கள் காணமுடிகிறது. அது என்ன? அது கவர்ச்சித்துக் கொண்டிருக்கிறது. அது கிறிஸ்துவினுடைய அடையாள பலகையாக இருக்கிறது. ஜனங்கள் அதை காண்கிறார்கள். அவர்கள் ஒன்று திரளுகிறார்கள். அவர்கள் தேவனை துதித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேவனைத் துதித்துக் கொண்டிருக்கும்போது, நான் அதை அவர்களில் கவனிக்கிறேன். அது இந்த வழியாய் செல்லும்போது, அவர்கள் அதை இங்கே கவனிக்கிறார்கள். எனவே ஒருவர் இன்னொருவர் மூலமாக கிறிஸ்து அவருடைய வெளிச்சத்தை பிரதிபலிக்கிறதை நாம் காண்கிறோம். இப்பொழுது நான் இங்கே எவ்வளவு பிரதிபலிக்க முடியும் என்பது காரியம் அல்ல. அது உங்கள் மேல் பிரதிபலித்தாலொழிய நாமும் கூட அதை ஒருபோதும் புரிந்து கொள்ளவும் கூட முடியாது. 143 சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ள அங்கே யாராவது இருந்தாலொழிய அது அவமாக்கப்படும். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அநேகராய் இருப்பார்கள். ஆனால் அதை ஏற்றுக் கொள்கிறவர்களிலோ, அது அவர்களில் பிரதிபலிக்கும். 144 அன்று காலை ஒருகால் ஸ்தேவானின் மரணதண்டனையிலே அங்கே ஐந்தாயிரம் பேர் இருந்திருக்கலாம். ஆனால் அது ஒருவனுக்குள்ளாக பிரதிபலிக்கப்பட்டது. அவனுடைய ஜீவியத்தின் முடிவிலும் கூட, அவன் “பரிசுத்தவான்களில் ஒருவன் என்று கூட அழைக்கப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல” என்றான். “ஏனென்றால் நான் தேவனுடைய சபையை, மரணத்திற்கு ஏதுவாக துன்பப்படுத்தினேன்” என்று அவன் கூறினான். அந்த இரத்த சாட்சியான ஸ்தேவான், கல்லெறிந்து கொல்லப்பட்டதற்கான அவனுடைய சம்மதம் ஒருபோதும் பவுலிடத்திலிருந்து நீங்கிப் போகவேயில்லை. அவன் “நான் மரணத்துக்கேதுவாய் சபையை துன்பப்படுத்தினேன்” என்றான். புரிகின்றதா? அது அவனை விட்டு நீங்கிப் போகவேயில்லை. ஏனென்றால் கிறிஸ்து பிரதிபலிக்கப்பட்டதை அவன் கண்டான். 145 ஸ்தேவான் அதை எப்படி செய்தான்? கிறிஸ்துவானவர் அற்புதங்களை நடப்பிக்கிறவராய் இருந்தார் என்று அவன் அறிந்திருந்தும், அவன் ஒருபோதும் எந்த அற்புதங்களையும் செய்யவில்லை. அவன் இந்த வல்லமைகளையும், மற்ற காரியங்கள் எல்லாவற்றையும் அறிந்திருந்தான். ஆனால் அவன் என்ன செய்தான்? அவனுடைய ஜீவியத்தை அந்த விதமான வழியிலே அவன் ஒப்புக் கொடுத்ததினால், அது கிறிஸ்துவின் வல்லமையாய் இருந்ததென்பதை அவர்கள் கண்டனர். ஆமென். 146 நீங்கள் ஒரு தரிசனமும் காணாதவராய் இருக்கலாம். நீங்கள் ஒரு வியாதியஸ்தன் மேலும் உங்கள் கரத்தை வைக்காதவர்களாயும், ஒரு மனிதன் எலும்புக்கூட்டை மீண்டுமாய் ஜீவனுக்கு திரும்பச் செய்கிற சர்வ்வல்லமையுள்ள தேவனின் கட்டளையை உணராதவராயு இருக்கலாம். மூன்று அல்லது நான்கு வானவில்களுக்கு அப்பால் அக்கரையில் அவர் நின்று கொண்டிருக்கிறதை நீங்கள் ஒருபோதும் காணாதவர்களாய் இருக்கலாம். அவருடைய சாயலை நீங்கள் ஒருபோதும் காணாதவர்களாயிருக்கலாம். நீங்கள் அவருடைய சத்தத்தை ஒருபோதும் கேட்காதிருக்கலாம். ஆனால் இருந்தாலும் நீங்கள் உலகத்திலிருந்து கலப்படமற்ற அவ்வளவு சுத்தமான ஒரு ஜீவியத்தின் மூலமாக இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கும் ஒரு அடையாள பலகையாய் இருக்க முடியும். உங்களுடைய ஜீவியத்தை சுற்றிலுமுள்ள அசுத்தமான காரியங்களோடு கிடக்கும் குப்பை கூளத்தினால் அல்ல; ஆனால் ஒரு சுத்தமான காரியத்தினால், அது உங்களைப்போன்று இருக்க வேண்டுமென்ற பசியையும், தாகத்தையும் பசியுள்ள இருதயத்திற்கு தூண்டும். ஆமென். 147 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள், “உப்பானது சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்?” அது உண்மை. பசியாயும், தாகமாயும் இருத்தல்! “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கக்கடவது”. பசியாயிருத்தல்! அடையாளப் பலகைகள்! பிரதிபலித்தல்! அற்புதம்! ஆம், ஐயா. 148 இப்பொழுதும் கூட நாம் இதைச் செய்ய விரும்பவில்லை. நாம் அதிலிருந்து ஒரு துரிதமான விற்பனையை செய்ய விரும்பவில்லை. “நான் கடந்த இரவு மனமாற்றமடைந்தேன். அல்லேலூயா! முழு உலகமும்…” என்ற வெறுமனே கூறுதல். நீங்கள் அதை செய்ய முடியாது. அது ஒரு துரிதமான விற்பனையாய் உள்ளது. நாம் அதைச் செய்தால் அந்தப் பொருள் மிக நல்லதாக இல்லையென்பதாகும். நீங்கள் நல்ல ஜீவியம் ஜீவித்தால், “நான் ஒரு சமயம் அறிவேன், நான் மனமாற்றமடைந்த பிறகு நான்—நான் இரண்டு வாரங்களாக நல்ல ஜீவியம் ஜீவித்தேன், நான் இரண்டு வாரங்களாக ஜீவித்தேன்…நான் இரண்டு வாரங்கள் சரியாக பரிபூரண ஜீவியம் ஜீவித்தேன்” என்று கூறுதல். அது ஒரு துரிதமான விற்பனை. அது நாம் பெற்றிருந்த இந்த ஹாடிகல் (Hadacol) மருந்தைப் போன்றே உள்ளது. அது ஒரு சில ஊட்டச் சத்துணவுகளால் ஒன்றாகச் சேர்த்து சுற்றப்பட்டதேயல்லாமல் மற்றபடி ஒன்றுமற்றதாய் இருந்தது. அது கொஞ்ச நேரம்தான் நிலைத்தது. முடிவிலே அது போய்விட்டது. 149 நீங்கள் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவனாக, இருக்க ஒவ்வொரு மணிநேரமும் கிறிஸ்தவனாக இருக்க, ஒவ்வொரு வருடமும் கிறிஸ்தவனாக இருக்க விரும்புகிறீர்கள், ஒரு துரிதமான விற்பனையாய் இருக்க அல்ல. ஆனால் உங்கள் வெளிச்சம் இவ்விதமாக பிரகாசிக்கக்கடவது. 150 நீங்கள் ஒரு மனிதனண்டை நடந்து சென்று, கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படி அவனிடம் கேட்டால், அவன் உங்கள் முகத்திற்கு நேராக சிரிக்கிறான். “நல்லது, அதற்கு ஒன்றுமேயில்லை அல்லது அவன் அதை ஏற்றுக்கொள்வான்” என்று உணர்ச்சியிழக்கவும், கூறவும் வேண்டாம். இல்லை. அது ஒரு ஹாடிகல் (Hadocal) என்ற மருந்து விற்பனையாய் உள்ளது. நாம் ஹாடிகல் என்ற மருந்தை விற்றுக்கொண்டிருக்கவில்லை. 151 நாம் சுவிசேஷத்தை, ஜீவிக்கின்ற தேவனுடைய வல்லமையை, இயேசு கிறிஸ்து நேற்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை விற்றுக் கொண்டிருக்கிறோம். உலகம் உங்களை பகைத்திருந்தால், அவர்கள் உங்களை பகைப்பதற்கு முன்னரே, அவர்கள் கிறிஸ்துவை பகைத்தனர். ஏனென்றால் அதே காரணத்தினாலே அவரை சிலுவைக்கு துரத்திச் சென்றனர். ஆனால் நாம் அவருடைய பிரதிநிதிகளாய் இருக்கிறோம். நாம் அவருடைய விளம்பர பலகைகளாய் இருக்கிறோம். நாம் அவரை விளம்பரப்படுத்துகிறோம். 152 அதிகமான, “டாக்டர். பி. எச். டி., மகத்தான பரிசுத்தமாக்கப்பட்ட இன்னின்ன சபை, இன்னின்னது, எப்பொழுதோ இன்னின்னரால் ஸ்தாபிக்கப்பட்டது மற்றும் இன்னார்-இன்னார், எங்களிடத்தில் இன்னார்-இன்னார், இன்னார்-இன்னார் இருக்கிறார்களே!” என்று மனம்போன போக்கான காரியங்களை உடையவர்களாய் இருக்க வேண்டாம். 153 அவர்களை அப்படியே பசியுள்ளவர்களாக்குங்கள். ஆமென். “மனுஷர் உங்களுடைய நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்தில் இருக்கிற பிதாவானவரை மகிமைப்படுத்துவார்கள்” என்று உங்களுடைய ஜீவியத்தினூடாக கிறிஸ்து எழுதின சுத்தமான விளம்பர பலகையாய், எளிமையாய் இருங்கள். அதுதான் காரியம். 154 உலகத்தின் குப்பைகளால் கறைப்படுத்தப்பட்டவர்களாய் இருக்க வேண்டாம். “நல்லது, நான் இன்னின்ன, இந்த பெரிய சபையை சேர்ந்தவன். இதுதான் பட்டணத்திலேயே மிகப்பெரிய சபை” என்று யாரோ ஒருவர் கூறுவது போன்று உங்களை விளம்பரப்படுத்த முயற்சிக்க வேண்டாம். 155 அங்கே உயரே எங்கள் அலுவலகத்தின் அருகே எங்களுக்கு ஒரு நபர் இருக்கிறார், ஒரு பெரிய சபைக்கு போவதற்காக அவர்கள் இங்கே இந்த பெரும்பாதையிலுள்ள சிறிய சபையை விட்டு விட்டனர். ஏனென்றால் அவர்கள், “மேல்தரமான ஜனங்கள் அங்கே போகிறார்கள்” என்றனர். மேல்தரமான ஜனங்களா? பார்த்தீர்களா? அவர்களுக்கு தெரியாது. அவர்களுடைய—அவர்களுடைய மூளை தூசி படிந்ததாக ஆகிவிடுகிறது. அது உலகத்தின் காரியங்களோடு களங்கமடைந்திருக்கிறது. மேல் தரமான ஜனங்களா? 156 ஒரு நல்ல தரமான ஜனங்கள் என்றால் என்ன? தேவனுடைய ஆவியினால் பிறந்த ஒரு ஜனம். அவர்கள் மிகவும் ஏழ்மையாயிருந்தாலும், அடுத்த வேளைக்கு ஆகாரம் எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறியாதிருந்தாலும் பரவாயில்லை. அந்த விதமான தரமுடைய ஜனங்கள்தான் எந்தக் காரியத்திற்கும் தகுதியுள்ளவர்களாய் உள்ளனர். மறுபடியும் பிறந்த ஜனங்களாய் உள்ளனர். 157 இயேசுவானவர் வந்தபோது, எந்த விதமான தரமுடைய ஜனங்களை அவர் தெரிந்தெடுத்தார்? கல்வியறிவில்லாதவர்களை, மீனவர்களை…பரலோகத்தின் திறவுகோல்கள் கொடுக்கப்பட்ட மகத்தான பரிசுத்தவான் அப்போஸ்தலன் பேதுரு தன்னுடைய பெயரையும் கூட கையெழுத்திட முடியாதவனாய் இருந்தான். பழைய மீன் படலங்களிலிருந்து வீசும் மீன்வாடையைக் கொண்டவனாய், ஆடையின் மீது பழைய எண்ணெய்ப் பசையைக் கொண்டவனாய் இருந்தான். இயேசு அந்தவிதமான தரமுடைய ஒரு மனிதனையே தெரிந்தெடுத்துக் கொண்டார். இன்றைக்கு அவன் உள்ளே ஆராதிக்கும்படி வந்தால், அவர்கள் அவனை சபையிலிருந்து உதைத்து தள்ளிவிடுவார்கள். பார்த்தீர்களா? 158 ஜனங்கள் “தரத்தை” நோக்கிக் கொண்டிருக்கின்றனர். தரமானவர்களுக்குள்ளே பிசாசு வாசம் செய்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா? பரலோகத்தில் உண்டான முதல் யுத்தத்திற்கு காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி (Lucifer) ஒரு மகத்தான தரமுடைய ஜனங்களை அழைத்துக் கொண்டபோது, ஒரு மேல்தரமான தூதர்களை சேர்த்துக் கொண்டபோது, அவன் நினைத்தான், மிகாவேலுக்கு இருந்ததைக் காட்டிலும் பெரிய ஒரு பெரிய ராஜ்ஜியத்தை, ஒரு பிரகாசமான, தங்கத்தால் ஆன இராஜ்ஜியத்தை பெற்றதாக நினைத்துக் கொண்டான். அவன் பரலோகத்திலிருந்து உதைத்துத் தள்ளப்பட்டான். தரமானது எங்கிருந்து வருகிறதை பாருங்கள். தரமானதிலிருந்து விலகியிருங்கள். 159 பசிக்கு தரமானது தேவையில்லை. பசிக்கு ஆகாரமே தேவைப்படுகிறது. ஆம் ஐயா, குளிருக்கு அக்கினி தேவைப்படுகிறது. ஒரு அக்கினி படமல்ல. தேவனுக்காக பசியாயும், தாகமாயும் இருப்பவர்களுக்கு சுவிசேஷமும், இயேசு கிறிஸ்துவின் வல்லமையுமே தேவைப்படுகிறது. அமென். அது எவ்வளவு எளிமையாயிருந்தாலும் கவலையில்லை. அது உலகத்தோடு எவ்வளவு—எவ்வளவு…எவ்வளவு பிரசித்தியற்றதாய் இருந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்களுக்கு உண்மை பொருளே தேவைப்படுகிறது. 160 மரித்துக் கொண்டிருக்கிற ஒரு மனிதன், தேவனை அவன் சந்ததிக்காக வேண்டும் என்பதை அறிந்திருக்கிற ஒரு மனிதன், எந்த தரத்தை குறித்தும் கவலைப்படுகிறதில்லை. அவன் தேவனை கண்டறிய விரும்புகிறான். அவன் ஆற்றண்டைக்கு வருகிறபொழுது, அங்கே அவனை சந்தித்து, அவனுக்கு வழியைக் காண்பிக்க யாராவது இருப்பார்கள் என்ற நிச்சயத்தை அவன் கண்டறிய விரும்புகிறான். “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” என்பதை அறிந்திருந்த ஏதோ ஒரு காரியத்தில் அவன் இப்பொழுது நங்கூரமிடப்பட விரும்புகிறான். 161 “நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும் அல்லது வரப்போகிறவைகளானாலும், பசியோ, நாசமோசமோ அல்லது வேறெந்த காரியமாயிருந்தாலும் கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாதென்று நான் நிச்சயத்திருக்கிறேன்” அதுதான் அவர்களுக்குத் தேவை. அந்த ஒரு காரியமே தேவையாயிருக்கிறது… 162 ஒரு பாவனை விசுவாசமல்ல. துரிதமாய் விற்கக்கூடிய ஏதோ ஒன்றல்ல, “இங்கே வந்து இந்த சபையை சேர்ந்து கொள்ளுங்கள்” என்பதல்ல. எனக்கு ஏதோ ஒரு காரியம் வேண்டும். “நல்லது, நான் போய் அந்த சபையில் சேர்ந்து கொள்வேன். நான் ஒரு அர்ப்பணிக்கும் ஆராதனையை வைக்கப்போகிறேன். போதகர் எனக்கு இரகசியமாக ஞானஸ்நானம் கொடுத்து என்ன சபைக்குள்ளாக சேர்த்துக் கொள்வார்” என்று கூறுகின்றனர். இல்லை, இல்லை, அதுவல்ல அது. அது ஒரு துரிதமான விற்பனை சரக்குகளில் ஒன்றாய் உள்ளது. அது நீண்ட காலம் நீடிக்காது. 163 ஒரு புருஷனோ அல்லது ஒரு ஸ்திரீயோ மனப்பூர்வமாய் வெளியே நடந்து வந்து, “நான் தவறாக இருக்கிறேன், நான் என்னுடைய அயலானைப் போல ஆக விரும்புகிறேன். நான் என்னுடைய அயல் வீட்டாரைப் போன்ற ஒரு ஸ்திரீயாக இருக்க விரும்புகிறேன். நான் என்னுடைய அண்டை வீட்டு மனிதனை போன்றவனாயிருக்க விரும்புகிறேன். நான் மனுஷர் முன்பாக மிகவும் தேவபக்தியுள்ளவனாக நடக்கவும், அவனைக் குறித்து ஜனங்கள் நினைத்தது போன்று என்னைக் குறித்தும் அவ்வாறே நினைக்க விரும்புகிறேன். நான் இயேசு கிறிஸ்துவைப்போல் இருக்க விரும்புகிறேன்” என்று சொல்லக்கூடிய ஒரு பண்டைய மனமாற்றத்தையே நான் உண்மையாக விரும்புகிறேன். 164 இப்பொழுது நினைவிருக்கட்டும். முடிவிலே நான்—நான்—நான் சற்று தொடர்ந்து பேசிக்கொண்டேயிருக்கிறேன். ஆனால் முடிக்கையிலே நான் இதை கூறவிரும்புகிறேன். நாம் அவருடைய விற்பனையாளர்கள் அல்ல. நாம் அவருடைய விளம்பர பலகைகளாயிருக்கிறோம். புரிகின்றதா? நாம் அவருடைய விற்பனையாளர்கள் என்று நினைக்காதீர்கள். அவருக்கு எந்த விற்பனை திறனும் தேவைப்படுகிறதில்லை, வெறும் விளம்பர பலகைகள்தான் தேவையாயுள்ளன. 165 நான் பொது சேவை நிறுவனத்தில் வழக்கமாக வேலை செய்து வந்தேன். அப்பொழுது வெளிவந்த (Mogal) மொகலாய விளக்குகளை நாங்கள் உடையவர்களாயிருந்தோம். அவர்கள் அதன்பேரில் ஒரு போட்டியை வைத்திருந்தனர். அதிக விளக்குகளை யார் விற்றாலும், ஓ, ஒரு பரிசை வைத்திருந்தனர். அவர்கள் அவைகளை விற்பதற்காக ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பெற்றனர். நல்லது, ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு வேலைக்காரரும் இந்த விளக்குகளுக்காக ஒரு விற்பனையாளனாக இருக்க வேண்டியதாய் இருந்தது. நல்லது, நான், “இந்த பொருள் எனக்கு உத்தரவாதமாக கொடுக்கப்பட்டால், நிறுவனம் இந்த விளக்கை எனக்கு உத்தரவாதமாக கொடுத்தால் நலமாயிருக்கும். இப்பொழுது விளக்கானது உண்மையாகவே நல்லதாக இருந்தால், அது தானாகவே விற்கும். அது நல்லதாய் இல்லையென்றால் அப்பொழுது சரியில்லாத ஏதோ ஒன்றை நான் பொது மக்களிடத்தில் கொடுக்கிறதாய் இருக்கும்” என்று இதைப் போன்ற ஒரு காரியத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். 166 நான் அதில் ஒருபோதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. நான் இந்த உயர் அழுத்த விற்பனையாளர்கள் காரியத்தில் நம்பிக்கை கொள்வதில்லை. அந்த காரணத்தினால் தான் நான் அதை மார்க்கத்திலும் நம்புகிறதில்லை. நான் நல்லபடியாக உள்ள ஒரு பொருளை வைத்திருந்தால், அது தானாகவே விற்கும். அது உண்மை. அது தானாகவே விற்கும். 167 எனவே நான் என்ன செய்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் அங்கே சென்று, நான் என்னுடைய கண்காணிப்பாளரிடத்தில் கூறினேன், நான் “இந்த விளக்குகளுக்கெல்லாம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதா?” என்றேன். “சரியாக உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது” என்றார். “அவர்கள் மறுக்க மாட்டார்களா?” என்றேன். “இல்லை, ஐயா” என்றார். 168 “அவைகளுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதா? வேலைத்திறம் மற்றும் ஒவ்வொரு காரியத்திற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதா?” என்றேன். “ஆம்” என்றார். 169 அவர்களுக்கு ஒரு அழகான மிருதுவான விளக்கை உண்டாயிருக்கிறதை நான் கண்டேன். எந்த ஒரு ஸ்திரீயும் அவைகள் அறையில் இருப்பதை பாராட்டுவாள். நான் என்ன செய்தேன் என்று உங்களுக்கு தெரியுமா? அவைகளில் கிட்டத்தட்ட இருநூறை எனக்கென்று எடுத்துக் கொண்டு நான் அறிந்த ஒவ்வொருவரிடமும் சுற்ற துவங்கினேன். 170 “பில்லி இந்தக் காலையில் உமக்கு என்ன வேண்டும்? நான் என்னுடைய இரசீதிற்கு பணம் செலுத்தவில்லையா?” என்றனர். நான் பணம் வசூலிக்க வேண்டியவனாயிருந்தேன். 171 அதற்கு நான், “ஓ, உம்முடைய இரசீதிற்கு நீர் பணத்தை செலுத்தி விட்டீர், நான் மற்றோன்றை உமக்கு கொடுக்க விரும்புகிறேன்” என்றேன். நான், “இங்கே நான் ஒரு விளக்கை வைத்திருக்கிறேன்” என்று கூற, “ஓ, நான் அதை வாங்க முடியாது” என்பார்கள். 172 நான் “இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள். அதை வாங்கி கொள்ளும்படி உங்களை ஒருபோதும் கேட்கவில்லை. நான் அவைகளில் ஒரு சுமையை வைத்திருக்கிறேன். நான்—நான் ஒன்றை உம்முடைய வீட்டில் வைக்க விரும்புகிறேன். நீங்கள் அதை ஒரு சில வாரங்கள் சற்று வைத்திருந்து அதை அனுபவியுங்கள். நான் திரும்பி வந்து அதை எடுத்துக் கொள்வேன். நாங்கள் இந்தக் காரியங்களை விளம்பரப்படுத்த வேண்டியவர்களாயிருக்கிறோம். வெறுமனே அதை வெளியே எடுத்துக் கொள்ளுங்கள். எனவே நான் அதை உங்களுடைய வீட்டில் சற்று பொருத்துவேன்” என்றேன். 173 “நல்லது, இப்பொழுது பில்லி நான்—நான் அதை வாங்க முடியாது. அதை வாங்குவதற்கு போதிய பணத்தை நான் வைத்திருக்கவில்லை” என்றனர். 174 “நான் அதை நீர் வாங்கிக் கொள்ளும்படி கேட்கவில்லையே, நான் கேட்டேனா? நான் வெறுமனே உம்முடைய வீட்டில் அமைத்து, நீங்கள் அதை அனுபவிக்கவே நான் சற்று விரும்புகிறேன் என்று நான் கூறுகிறேன்” என்றேன். “அதில் ஒன்றும் வேடிக்கை இல்லையே?” என்றனர். 175 “அதில் கொஞ்சம் கூட இல்லை. நீங்கள் என்னை அறிவீர்கள். நான் திரும்பி வந்து அதை எடுத்துக் கொள்வேன். நான் இன்னும் இரண்டு வாரங்களில் அதை மீண்டும் எடுத்துக் கொள்வேன், சரி, நான் சீக்கிரமாக வந்து அதை எடுத்துக் கொள்வேன். நீங்கள் செய்யும்படி நான் விரும்புகிற ஒரே காரியம் வெறுமனே…நான் என்னுடைய வண்டியிலிருந்து அதை கீழே இறக்கி அதை அமைப்பாய் ஒரு இடத்தில் வைக்க நான் விரும்புகிறேன். இங்கே அவைகளில் அநேகமானவைகளை நான் இறக்க வேண்டியிருக்கிறேன். நான் என்னுடைய வண்டியிலிருந்து அதை கீழே இறக்கி, அதை ஒரு இடத்தில் பொறுத்தி வைக்கவே விரும்புகிறேன். நான்—நான் நீர் அதை வாங்கிக் கொள்வதற்கு விரும்பவில்லை, நீர் அதை வாங்கிக்கொள்ளும்படியாக நான் உம்மை கேட்கவுமில்லை. இங்கே நான் பொறுத்த நீர் அனுமதிக்கும்படிக்கே கேட்டேன்” என்றேன். “நல்லது, அது உடைந்துவிட்டால் என்னவாகும்?” என்று கேட்டனர். “அது என்னுடைய பொறுப்பு. நான் அதற்கு பின்னால் நிற்கிற ஒருவனாய் இருக்கிறேன்” என்றேன். 176 அந்த விளக்கு தானாகவே விற்கும் என்று நான் அறிந்திருந்தேன். அது ஒரு உண்மையான பொருளாயிருந்தது என்பதை நான் அறிந்திருந்தேன். நான் விளக்கை வீட்டில் பொருத்தினேன். நான் அந்த இருநூறு விளக்குகளில் பத்து விளக்கைக் கூட திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை. நான் அந்த போட்டியில் ஜெயித்தேன். என்ன காரணத்தினால்? ஏன்? அந்த விளக்கு தானாகவே விற்றுவிட்டது. நீங்கள் அதை ஒருமுறை பாருங்கள். அது என்ன என்பதை பாருங்கள், அதன் பின்னர் உங்களுக்கு அது தேவையாயிருக்கும். அது தானாகவே விற்கும். 177 அது அதே காரியமாகத்தான் இருக்கிறது. நாம் கிறிஸ்துவை விற்பதற்கு பெரிய ஸ்தாபனங்களை உடையவர்களாய் இருக்க வேண்டியதில்லை. நாம் உயர்வான கல்விபயின்ற பிரசங்கிமார்களாய், பெரு நகராண்மைக் கழக தலைவர்களாயிருக்கின்ற உயரிய மெருகேற்றப்பட்ட ஜனங்களாய், நகரத்தின் வித்தியாசமான காரியங்களை உடையவர்களாய் இருக்க வேண்டியதில்லை. நம்மிடத்தில் இருக்க வேண்டியது என்னவென்றால் கிறிஸ்துவே. கிறிஸ்து தம்மைத்தானே விற்றுக் கொள்கிறார். நீங்கள் கிறிஸ்துவை ஒரு மனிதனுடைய இருதயத்திற்குள் வைத்து “நீ இந்த ஸ்தாபனத்தை சேர்ந்து கொள்ள வேண்டும், அல்லது அந்த ஒன்றை சேர்ந்து கொள்ள வேண்டும்” என்று நீங்கள் அவனிடத்தில் கூறவேண்டியதில்லை. அவர் ஏற்கனவே அந்தப் பொருளை விற்று விட்டார். 178 நீங்கள் பசியாயிருக்கிறார்களா? “பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்”. நாம் இப்பொழுது இராப்போஜனப் பந்திக்கு வர ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் கிறிஸ்துவை உங்களுடைய ஜீவியத்தில் ஒருவேளை இதுவரை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவர்கள்…நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், அப்பொழுது நீங்கள் பசியாயிருந்து கொண்டிருப்பீர்கள். இப்பொழுது முப்பத்தியொரு வருடங்களாக நான் ஒரு கிறிஸ்தவனாக இருந்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் நான் துவங்கினபோது இருந்ததைக்காட்டிலும் நான் கிறிஸ்துவுக்காக அதிக பசியாயுள்ளவனாய் இருக்கிறேன். அவர் நாட்கள் செல்ல செல்ல இனிமையாகிக் கொண்டே இருக்கிறார். 179 நான் வீதி வழியாக அவைகளை கண்டது போன்றே, நான் அவருடைய சிறு விளம்பர பலகைகளை கவனிக்கிறேன். அவர்களை இங்கே வெளியே மருத்துவமனையிலே கவனிக்கிறேன். அவர்களுடைய மரணவேளையிலே அவர்களை நான் கவனிக்கிறேன். இங்கே நான் ஒரு பலப்பரீட்சையின் போது அவர்களை கவனிக்கிறேன். அந்த சிறிய அம்மாளை கவனிக்கிறேன். அவள் அங்கே எவ்வளவு உண்மையான, அசலான பரிசுத்தவாட்டியைப் போன்று தன்னைத்தானே கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாள். 180 அண்மையில் இங்கே நான் ஒரு சிறிய கடையிலே நின்று ஒரு சிறு அம்மாளை கவனித்தேன். [ஒலிநாடாவில் காலி இடம்.—ஆசி.]…சுற்றி திரும்பத் துவங்கினாள். “இயேசுவை உன்னுடைய இரட்சகராக நீ அறிந்திருக்கிறாயா?” என்று கேட்டாள். அந்தப் பையன் தன்னுடைய தலையை கதவண்டையின் கீழே தொங்க வைத்துக் கொண்டான். பார்த்தீர்களா?…?…அங்கே தான் காரியம். ஓ, அவள் என்னை அறிந்திருக்கவில்லை, ஆனால் நான் அவளை அறிந்திருந்தேன். நான் அவளை அறிந்திருந்தேன். நான் அவளை கவனித்தேன். இப்பொழுது அவளுக்கு திருமணமாகிவிட்டது. அவள் ஒரு சிறிய பிரசங்கியாரை மணந்து கொண்டாள். இப்பொழுது அவர் நன்றாய் இருக்கிறார். 181 ஆக அதுதான் அது, நீங்கள் பாருங்கள், நான் அந்த விளம்பர பலகையை கவனிக்க விரும்புகிறேன். நான் அதை கவனிக்க விரும்புகிறேன். நாம் புசிக்கக்கூடிய, ஆவிக்குரிய ஆகாரத்தை புசிக்கக்கூடிய—புசிக்கக்கூடிய அந்த இடத்திற்கு அங்கே செல்லும்படியாக அது—அது—அது—அது என்னை பசியுள்ளவனாக்குகிறது. ஏனென்றால் அந்த பெண் சபையை சார்ந்தவள் அல்ல என்பதை நான் அறிவேன். அவள் ஒரு கிறிஸ்தவளாயிருந்தாள். அது உண்மையே. ஆம். உங்களால் அவ்வாறு சொல்ல முடியும். 182 வேதம், “பேதுருவும், யோவானும்…” என்று கூறியுள்ளது. (அவர்கள் அந்த மனிதனை அலங்கார வாசலண்டையிலே சுகப்படுத்தியைப் பிறகு; அவன் தாயின் வயிற்றிலிருந்து முதல் சப்பாணியாயிருந்தான். பாருங்கள், அவன் அதிக பெலனில்லாதவனாயிருந்தான். அவனால் நீண்ட நேரம் நிற்க முடியாதிருந்தது. எனவே அவனை நடக்க வைக்க பேதுரு அவனைப் பிடித்து தூக்கி நிற்க வைக்க வேண்டியதாயிருந்தது. சுகமடைந்தவன்…அவனுடைய தாயின் வயிற்றிலிருந்தது முதல் சப்பாணியாயிருந்தான், பாருங்கள். அவர்கள் ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக அவனைக் கொண்டு சென்றபோது, இயேசுவின் நாமத்தில் பிரசங்கிக்கக்கூடாது என்று அவர்களுக்கு தடை விதித்தனர்.) “அவர்கள் பேதமையுள்ளவர்கள் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்” என்று வேதம் கூறியுள்ளது. இந்த அப்போஸ்தலர்கள் பேதுருவும் யோவானும் படிப்பறியாத பேதமையுள்ள மனிதர்கள். அவர்கள் எந்த மகத்தான வேத சாஸ்திரத்தையும் அறியாதிருந்தார்கள். அவர்கள் மீன் பிடிப்பவர்களாய் இருந்தனர். தங்களுடைய பெயரையே கையெழுத்திட முடியவில்லை. ஆனால், “அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்கள் என்று அறிந்து கொண்டார்கள்” என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் என்னவாய் இருந்தனர்? விளம்பரபலகைகள். விளம்பரபலகைகள். 183 ஓ, நாம் தொடர்ந்து பேசக்கூடும். தேவனே, விளம்பரப் பலகைகளாய் இருக்க எங்களுக்கு உதவி செய்யும். இங்கே இருக்கின்ற இந்த பிரான்ஹாம் கூடாரம், தேவனுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டதும், பிரதிஷ்டை செய்யப்பட்டதுமான இந்த சிறிய ஸ்தலம், இங்கே இந்த தேசத்தினூடாக அநேக விளம்பர பலகைகளை இது உற்பத்தி செய்து, இந்த தேசம் முழுவதும் பசியாயும், தாகமாயும் இருப்பவர்களை கிறிஸ்துவண்டைக்கு கொண்டு வர காரணமாய் இருப்பதாக என்பதே என்னுடைய ஜெபமாய் உள்ளது. நாம் நம்முடைய தலைகளை அப்படியே ஒரு நிமிடம் வணங்குவோமாக. 184 மகா கிருபையுள்ள பிதாவே, கிறிஸ்துவை எங்கள் ஜீவியங்களிலும் எங்கள் இருதயங்களிலும் உடையவர்களாய் இருப்பதற்கு நாங்கள் உண்மையிலேயே சிலாக்கியமடைந்தவர்களாய் இருக்கிறோம். எங்கள் பிதாவே, நாங்கள் அவருக்காக மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவரை அறிவதே ஜீவனாய் இருக்கிறது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். கோட்பாட்டை அறிவதல்ல, புஸ்தகத்தை அறிவதல்ல, ஆனால் கிறிஸ்துவை அறிவதே ஜீவனாய் இருக்கிறது. பிதாவாகிய தேவனே, நாங்கள் அவரை எங்களுடைய இரட்சகராகவும், எங்களுடைய சுகமளிப்பவராகவும், எங்களுடைய பெலனாகவும், எங்களுடைய ஒத்தாசையுமாயிருக்கின்ற அவரை அந்த வழியிலேயே கண்டிருக்கிறோம். எங்களுடைய ஒத்தாசை—எங்களுடைய ஒத்தாசை கர்த்தரிடத்திலிருந்து வருகிறது. நாங்கள் ஒன்று மற்றவர்கள் என்பதை அறிக்கையிடுகிறோம். நாங்கள் ஒன்றும் அறியாதவர்கள். நாங்கள் அறிந்துகொள்ள அல்லது அறிந்துகொள்ள வாஞ்சிக்கின்ற ஒரே ஒரு காரியம், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையிலுள்ள கிறிஸ்துவாக இருக்கின்றது. ஏனென்றால் இதை விசுவாசிக்கின்ற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறார்கள். 185 பரலோகப் பிதாவே, நீர் இந்த சிறிய சபையையும், இந்த உஷ்ணமான இரவில், இங்கே இந்த ஓய்வுநாள் மாலையில், இந்த மரத்தினாலான சிறு ஜெபக் கூடாரத்தில் உட்கார்ந்து கொண்டு, தேவனுடைய ஆசீர்வாதங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் இந்த ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கின்றோம். 186 சில கலப்பான, கோர்வையற்ற வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன, பசியாயுள்ள, பசியாயிருந்து கொண்டிருக்கிற ஒரு யாத்திரிகனே விளம்பரப்பலகைகளை பார்க்கிறான், தேவனே, எங்களை மிகுந்த பசியாயுள்ளவர்களாகவும், தாகமுள்ளவர்களாகவும் ஆக்கும். அப்பொழுது உம்முடைய விளம்பர பலகைகளை நாங்கள் கவனித்து கிறிஸ்தவ ஜீவியத்தை கண்டடைவோம். நாங்கள் உமக்காக விளம்பரப்பலகைகளாக இருப்போமாக. நாங்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிற விளம்பரப் பலகையை அவர்கள் காணும்பொழுது அவர்கள் பசியடையும்படியாக, உம்முடைய வெளிச்சத்தை ஒரு பசியாயுள்ள ஆத்துமாவிற்கு நீர் பிரதிபலிப்பீராக. கிறிஸ்துவே எங்களுடைய பொறுப்பாளர், எங்களுக்கு ஒரு சமாதானமுள்ள ஜீவனையும், முழு சந்தோஷத்தையும், பெலனையும் எங்களுடைய ஆத்துமாவில் கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு ஜீவியம் ஜீவிக்கவும், அதைப்போன்று இருக்கவுமே ஜனங்கள் விரும்புவார்கள். இதை அருளும், கர்த்தாவே. அதை எங்களெல்லாருக்கும் தாரும். 187 அதை இன்னும் கண்டறியாத சிலர் இங்கே இருக்கலாம். ஆனால் இன்றிரவு அவர்கள் தியானித்துக் கொண்டு ஜீவயாத்திரையினூடாக வித்தியாசமாயிருப்பதற்கும், பரிசுத்தமாக்கப்பட்ட பண்டைய ஜனங்களாய் இருக்கவும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வயதான கடந்து போன தாய்மார்களின் நாட்களில் தெரு முனையில் அவர்கள் அந்த மனிதனை பார்த்து சிரித்து, அவன் தன்னுடைய புத்திக்கோளாறினால் அங்கே வெளியில் நின்றுகொண்டு பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தனர். ஆனால் இப்பொழுதோ அந்த மனிதன் ஒரு விளம்பரப்பலகையாய் இருந்தான் என்பதை அவர்கள்—அவர்கள் காண்கின்றனர். அவன் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்த ஒரு அடையாளமாய் இருந்தான். அந்த வயதான பரிசுத்தமாக்கப்பட்ட தாய், தன்னுடைய முடியை பின்னாலே பின்னி விட்டுக்கொண்டு வீதி வழியாக போகும்போது [ஒலிநாடாவில் காலி இடம்—ஆசி.] அதே சமயத்தில், வீதிவழியாக போகும்போதும், நம்முடைய வாலிப ஜனங்கள் அவர்களைப் பார்த்து சிரித்திருக்கலாம், “அது என்ன விதமான ஒரு பண்டைய பொருள்?” என்று நினைத்திருக்கலாம். 188 ஆனால், கர்த்தாவே, அது நித்திய ஜீவனுக்கு ஒரு விளம்பர பலகையாய் இருந்தது என்பதை நாங்கள் உணர்கிறோம். பிதாவே, நாங்கள் அதை கடந்து வந்துள்ளோம். நாங்கள் வருந்துகிறோம். இன்றிரவு பிதாவே, நாங்கள் திரும்பிச் சென்று, அதை மீண்டுமாய் பின்தொடர்வோமாக. அதைப்போன்றே எங்களை ஆக்கும், எங்களுக்கு ஜீவனைத் தாரும். நாங்கள் உமக்கு முன்பாக பரிசுத்தவான்களாய் காணப்பட்ட விரும்புகிறோம். நாங்கள் அதைப்போன்று நடந்துகொள்ள விரும்புகிறோம். நாங்கள் தூஷித்த அந்த மனிதன், நாங்கள் வீண் சந்தடிசெய்த அந்த மனிதன், அவனோ திரும்பி ஒரு வார்த்தை கூட கூறவில்லை. ஆனால் மிகவும் இனிமையாக, “அதெல்லாம் பரவாயில்லை, மகனே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்றான்.